மோதியின் இஸ்ரேல் சுற்றுப்பயணம்: இந்திய நிலைப்பாட்டில் ஒரு திருப்புமுனையா?

  • 4 ஜூலை 2017

இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் முதல் இந்தியப் பிரதமர் என்ற முத்திரையுடன், இன்று இஸ்ரேல் பயணத்தைத் துவக்குகிறார் நரேந்திர மோதி.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவும், யூத நாடும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஒன்றுபட்டு ஆழமான தொடர்பைக் கொண்டிருப்பதாக பிரதமர் மோதி சமீபத்தில் குறிப்பிட்டார்.

இந் நிலையில், இரு நாடுகளும் ராணுவம் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், பிரதமர் மோதி, ரமல்லாவுக்குச் செல்ல மாட்டார் என்றும், வழக்கமான நடைமுறைகளைப் போல, பாலத்தீன தலைவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தப் பயணம், இஸ்ரேல் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் ஒரு திருப்புமுனை என்று பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சங்கள் என்ன?

தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளும் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இஸ்ரேலிடம் இருந்து தொடர்ந்து ஆயுதங்கள் வாங்கி வருகிறது இந்தியா.

சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை ஈடுகட்டும் வகையில், ராணுவத் திறனை மேம்படுத்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இஸ்ரேலிடம் இருந்து ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள நவீன ஆயுதங்களை இந்தியா வாங்குகிறது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

கூட்டு வான் பாதுகாப்பு முறையை ஏற்படுத்துதல், ட்ரோன், ரேடார், இணை பாதுகாப்பு மற்றம் தகவல் தொடர்பு சாதனங்களை இந்தியா வாங்குதல் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இஸ்ரேலில் மோதியை வரவேற்கும் இந்திய சமூகம்

பாதுகாப்பு ரீதியான ஒத்துழைப்பு தவிர, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிலும் இந்தியாவுக்கு இஸ்ரேல் உதவும் எனத் தெரிகிறது.

இந்திய முஸ்லிம்கள் - இஸ்ரேல் உறவுக்கு தடைக்கல்லா?

இரு நாடுகளுக்கிடையே, கடந்த 25 ஆண்டுகளாக ராஜீய உறவுகள் தொடர்கின்றன.

ஆனால், இந்தியாவின் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், இரான் மற்றும் அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நம்பியிருப்பதாலும், கடந்த காலங்களில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துடன் இந்தியா ஒரு சரிசமமான உறவுப் பாலத்தையே பராமரித்து வந்தது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, மோதியின் வருகையை வரலாற்றுப்பூர்வமானது என வர்ணித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இஸ்ரேலின் எஃப்-15 சிறப்பு போர் விமானம்

பாதுகாப்பு, விவசாயம், நீர், எரிசக்தி உள்பட பல துறைகளில் ஒத்துழைப்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவனுடன் சந்திப்பு

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் யூத மையத்தின் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவனை மோதி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் என்ற அந்தச் சிறுவனை, இந்திய செவிலித் தாய் சான்டா சாமுவேல் காப்பாற்றினார். அவரை இஸ்ரேல் நாடு பாராட்டி கெளரவித்தது. அதற்குப் பிறகு, அந்தச் சிறுவனுடன் அவரும் இஸ்ரேலிலேயே குடியேறிவிட்டார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதலில் தாஜ் ஹோட்டல் உள்பட பல இடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. யூத மையத்தில் நடந்த தாக்குதலில் 6 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

மோதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

மோதிக்கு, உயரிய மரியாதையாகக் கருதப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெஞ்சமின் நெதன்யாஹு

வழக்கமான நடைமுறையைப் போல, முக்கிய சந்திப்புக்களில் மட்டும் நெதன்யாஹு கலந்துகொள்ளாமல், ஏறத்தாழ மோதி செல்லும் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார். அமெரிக்க அதிபர் போல, மிக முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே இஸ்ரேல் இத்தகைய கெளரவத்தை அளிப்பது வழக்கம்.

இஸ்ரேல் அருங்காட்சியகம் மற்றும் விவசாய திட்டம் தொடர்பான இடங்களை இருவரும் இணைந்து பார்வையிடுகின்றனர். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட, இஸ்ரேலில் வாழும் யூத மக்களுக்காக மோதி பங்கேற்கும் நிகழ்வில் நெதன்யாஹுவும் கலந்துகொள்கிறார்.

இதையும் படிக்கலாம்:

செளதி அரசரை கடவுளுக்கு நிகராக புகழ்ந்த பத்திரிக்கையாளர் இடைநீக்கம்

''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''

உக்கிரமடையும் மொசூலுக்கான மோதல்: தற்கொலை தாக்குதல்களில் ஐ.எஸ் தீவிரம்

விமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி!

இஸ்ரேல் உருவான காலத்தில் தொலைந்துபோன குழந்தைகளின் சோகக்கதை:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இஸ்ரேல் உருவான காலத்தில் தொலைந்துபோன குழந்தைகளின் சோகக்கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்