‘’உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது’’; வட கொரியாவின் ஏவுகணை சோதனையை சாடும் அமெரிக்கா

படத்தின் காப்புரிமை Reuters

வட கொரிய கடந்த செவ்வாய் கிழமையன்று ஐ சி பி எம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவுக்கும், உலகிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது என்று கருத்து கூறியுள்ள அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன், ஒரு அணு ஆயுதம் ஏந்திய வட கொரியாவை என்றைக்கும் அமெரிக்கா ஏற்று க்கொள்ளாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது நாட்டின் முதல் வெற்றிகரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை என்று முன்னர் வட கொரியா தெரிவித்திருந்தது.

தற்போது வடகொரியாவால் அலாஸ்காவிற்குகூட ஏவுகணை ஒன்றை ஏவ முடியும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

எனினும், இந்த ஏவுகணையால் அதன் இலக்கை துல்லியமாக தாக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜப்பான் கடல் மீது நடத்தப்பட்ட சோதனைக்கு பதிலடி தரும் விதமாக, அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டாக இணைந்து இலக்கை துல்லியமாக சுடும் திறனை காட்டும் விதமாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக பென்டகன் பேச்சாளர் டேனா வைட் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

படத்தின் காப்புரிமை KCNA/REUTERS

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு சபையில் அவசர கூட்டம் ஒன்றை நடத்த அமெரிக்க கேட்டுக் கொண்டுள்ளது. இன்றைய நாளின் (புதன்கிழமை) பிற்பகுதியில், ஒரு மூடப்பட்ட அறையில் 15 உறுப்பினர்கள் கொண்ட அமர்வு கூடவுள்ளது.

''வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா தனது கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறது'' என்று அறிக்கை ஒன்றில் டில்லர்சன் குறிப்பிட்டுள்ளார்.

''கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்திருப்பதன் மூலம் அமெரிக்காவிற்கும், நம்முடைய கூட்டணி மற்றும் நட்புறவு நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் மற்றும் இந்த உலகிற்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதை இச்சோதனை காட்டுகிறது.'' என்று மேலும் அதில் கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்