எமிரேட்ஸ் மற்றும் துருக்கிய விமானங்களில் லேப்டாப் தடை நீக்கம்

  • 5 ஜூலை 2017

அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் எடுத்துச் செல்லக் கூடாது என்ற தடை எமிரேட்ஸ் மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு விலக்கப்பட்டது என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ள.

படத்தின் காப்புரிமை AFP

எட்டு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து வரும் மற்றும் அங்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் மற்றும் பிற பெரிய மின்னனு சாதனங்களை விமானத்தின் உள் எடுத்துச் செல்லக்கூடாது என மார்ச் மாதத்தில் அமெரிக்கா ஆணையிட்டது. அதில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அந்த தடை விதிக்கப்பட்டது.

தனது துபாய் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்தை இயக்கும் எமிரேட்ஸ் நிறுவனம், புதிய பாதுகாப்பு விதிகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

தனது பயணிகள், லேப்டாப் எடுத்துச் செல்ல தற்போது அனுமதிக்கப்படுகின்றனர் என துருக்கிய விமானம் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று அபு தாபியிலிருந்து வரும் `எடிஹாட்` விமானங்களுக்கு அந்த தடை நீங்கியதை தொடர்ந்து இந்த இரண்டு நிறுவனங்களும் அதன் வரிசையில் சேர்கிறது. எடிஹாட் நிறுவனம் கடுமையான சோதனைகளை மேற்கொள்வதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்த பிறகு அந்த தடை நீக்கப்பட்டது.

பிற செய்திகள்:

"துபாயின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் எமிரேட்ஸ் விமானங்களுக்கான தடை நீங்கிவிட்டது இது உடனடியாக செயல்பாட்டிற்கு வருகிறது" என எமிரேட்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

துபாயிலிருந்து 12 அமெரிக்க நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் அந்நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களிடம், கடந்த சில மாதங்களாக தங்களுடைய வாடிக்கையாளர்கள் காட்டிய புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி என தெரிவித்துள்ளது.

புதன்கிழமையன்று அமெரிக்காவிற்கு செல்லும் தங்களது விமானங்களில் அனைத்து மின்னனு சாதன்ங்களும் அனுமதிக்கப்படும் என துருக்கிய விமான சேவை நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது

விமான நிலைய பாதுகாப்பு

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு விதிமுறைகள் மின்னணு சாதனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு வழிவகுக்கும் என விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

இந்த புதிய நடவடிக்கைகளில் மேம்படுத்தபட்ட சோதனைகள், பயணிகளை முழுமையாக சோதிப்பது, மற்றும் 105 நாடுகளில் குண்டுகளை மோப்பம் பிடிக்கக்கூடிய நாய்களை அதிகம் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

செவ்வாய்க்கிழையன்று இஸ்தான்புல்லில் உள்ள துருக்கியின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தை அமெரிக்க மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் பார்வையிட்டதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்தான்புல்லில் உள்ள அட்டடர்க் சர்வதேச விமான நிலையத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மற்றும் எக்ஸ்ரே கருவியில் நவீன டொமொகிராஃபி ஆகியற்றை பயன்படுத்த துருக்கி சமீபத்தில் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

மார்ச் மாதம் விதிக்கப்பட்ட அந்த விதிகளின்படி துருக்கி, மொராக்கோ, ஜோர்டான், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், செளதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வரும் விமானங்களின் உள் ஸ்மார்ட்ஃபோன்களை காட்டிலும் பெரிய சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்று ஆணையிடப்பட்டது.

அமெரிக்காவை போன்று பிரிட்டனும் இம்மாதிரியான விதிமுறைகளை விதித்தது ; ஆனால் நாடுகளின் பட்டியல் வேறுபடும்.

தனது விமான நிறுவன சேவைக்கு விதிக்கப்பட்ட சேவையை கூடிய விரைவில் பிரிட்டனும் நீக்கும் என எதிர்பார்ப்பதாக துருக்கி விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிஷியா மற்றும் செளதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் நேரடி விமானங்களில் 16.0செமீ X 9.3செமீ X 1.5செ.மீ அளவைக் காட்டிலும் பெரிதான சாதனங்கள் அனுமதிக்கப்படாது என பிரிட்டன் அரசு தெரிவித்திருந்தது.

பிபிசியின் பிற செய்திகள்:

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புதிய புத்தகம்

சமூக ஊடகங்களில் `மீம்' விளம்பரங்கள்: இது ஒரு டிஜிடல் வியூகம்!

மோதியின் இஸ்ரேல் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாவது எதனால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்