ஜி-20 மாநாடு: ஆர்பாட்டங்களில் தீவிரவாதிகள் ஊடுறுவலா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜி-20 மாநாடு: ஆர்பாட்டங்களில் தீவிரவாதிகள் ஊடுறுவலா?

  • 6 ஜூலை 2017

ஸ்திரத்தன்மையை குலைக்கும் ரஷ்ய நடவடிக்கைகள் என தான் வர்ணித்த செயல்களுக்கு எதிராக அமெரிக்கா செயற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இவரது குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

போலந்துநாட்டு அதிபர் ஆண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து வார்சாவில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அமைதி நீடிக்கவேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியோடிருப்பதாக தெரிவித்தார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை செய்துள்ள வடகொரியாவுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பது குறித்தும் தான் பரிசீலித்துவருவதாகவும் அவர் கூறினார்.

போலந்து பயணத்தை முடித்துக்கொண்ட ட்ரம்ப், ஹம்பர்க் நகரில் நடக்கும் ஜி-20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

ஹம்பர்க் நகரில் நாளை வெள்ளிக்கிழமை (07-07-2017) நடக்கும் ஜி-20 மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.

உலகத்தலைவர்கள் ஒன்றுசேரும் இந்த மாநாட்டை ஒட்டி அங்கே பல்லாயிரம் பேர் பங்கேற்கும் பெரும் ஆர்பாட்டங்கள் நடக்கவுள்ளன. ஆனால் இந்த ஆர்பாட்டங்களில் தீவிரவாதிகளும் கடும்போக்காளர்களும் ஊடுறுவக்கூடுமென உள்ளூர் காவல்துறை பெரிதும் கவலைப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்