அமெரிக்க கொடியின் மீது சிறுநீர் கழித்த பெண்ணுக்கு பாலியல் மிரட்டல்

அமெரிக்க தேசியகொடியின் மீது சிறுநீர் கழித்த காணொளி பதிவை பகிர்ந்து கொண்ட பெண்ணொருவர், அவரது குடும்பத்தினரை குறிவைப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Facebook/ Emily Lance

தன்னுடைய செயல்களுக்கு அவரது குடும்பத்தினர் ஆதரவு அளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது இந்த காணொளியை பதிவேற்றிய பின்னர், கொலை மற்றும் பாலியல் வல்லுறவு மிரட்டல்களை ஆன்லைன் மூலம் எமிலி லான்ஸ் பெற்றிருக்கிறார்.

அவருடைய பதிவு தற்போது ஃபேஸ்புக்கில் இல்லை. ஆனால், அவருடைய தந்தையும், தந்தையின் பணியிடமும் குறிவைக்கப்படுவதாக முன்னர் தகவல் பதிவேற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் வலுவான கருத்து சுதந்திர சட்டங்கள் இருப்பதால், அமெரிக்க கொடியை அவமதித்தல் அங்கு குற்றமல்ல.

இந்த காணொளியில், அமெரிக்க கொடி தொங்கவிடப்பட்ட கழிவறையில் லான்ஸ் நின்று கொண்டிருக்கிறார். பெண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க பயன்படும் கருவியின் உதவியோடு அமெரிக்க கொடி மீது அவர் சிறுநீர் கழிப்பது பதிவாகியுள்ளது.

தேசியவாதம், நாடு, கொடி பற்றி மிக மோசமாக அதில் எழுதியும் விமர்சனம் செய்திருந்தார்.

"என்னுடைய விளையாட்டுத்தனமான அல்லது தவறான" செயல்களை குடும்பத்திலுள்ள யாரும் ஏற்றுகொள்ளவில்லை என்ற கூறி, உங்களுடைய கோபத்தை வேறு யாரிடமும் காட்ட வேண்டாம் என்று பின்னர் லான்ஸ் அவரை எதிர்ப்போரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

"என்னுடைய முடிவுகளில் குடும்பத்தினருக்கு எந்தப் பங்கும் இல்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

அவருடைய தந்தையும், தந்தையின் பணியிடமும் என்வாறு குறிவைக்கப்படுகிறது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

நீங்கள் என்ன புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? நான் சுதந்திரத்தை கொண்டாடுவதை தண்டிக்கும் விதமாக நீங்கள் சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள். இந்த இரண்டு வழிகளிலும் நீங்கள் செயல்பட முடியாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்