பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அதிபர் டிரம்ப் ஜி20 உச்சி மாநாடு குறித்து பெருமிதம்

  • 9 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Reuters

பருவகால மாற்றம் தொடர்பில் அமெரிக்கா தனி நிலைப்பாட்டை எடுத்தாலும், ஜெர்மனியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு அற்புதமான வெற்றியை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் அமெரிக்காவின் முடிவை 18 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கீகரித்ததாக கூட்டு அறிக்கை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

எனினும், பிற ஜி20 உறுப்பினர்கள் ''மாற்ற முடியாத'' ஒப்பந்தத்திற்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை தருவதாக அதில் தெரிவித்துள்ளனர்.

ஹாம்பர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதிநாளின் போது, இந்த விவகாரத்தில் இருந்த முட்டுக்கட்டை நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, இறுதி ஒப்பந்தம் ஒன்று இறுதியாக எட்டப்பட்டு சனிக்கிழமையன்று உச்சி மாநாட்டின் கூட்டு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ட்ரம்ப் புடின் முதல் சந்திப்பு: உறவு மேம்படுமா?

புதைபடிவ எரிபொருள்களை அதிக சுத்தமாகவும், திறம்படவும் பயன்படுத்த பிற நாடுகளுடன் அமெரிக்கா மிகவும் நெருக்கமாக பணியாற்றும் முயற்சியில் ஈடுபடும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தம்தான் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்.

மாநாட்டின் இறுதி செய்தியாளர் சந்திப்பில், ஹாம்பர்க்கில் நடைபெற்ற உச்சிநாட்டை நடத்திய ஜெர்மன் சான்சலர் ஏங்கெல்லா மெர்கல், டிரம்பின் நிலைப்பாட்டினால் மனச்சோர்வடைந்திருப்பதாகவும், ஆனால் பிற 19 நாடுகள் அமெரிக்காவின் மறுபேச்சுவார்த்தையை எதிர்த்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வெளிநடப்பு வளரும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்கு தனது நாட்டின் ஒப்புதலை தெரிவிப்பது கேள்விக்குறியாகி உள்ளதாக துருக்கி அதிபர் எர்துவான் பின்னர் கருத்து தெரிவித்தார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்