சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் கற்பனையில் டிரம்ப் - புதின் சந்திப்பு

  • 9 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை @TODD_SPENCE/TWITTER

ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு இடையில் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. ஆனால், அந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் கற்பனை செய்து முன்னதாகவே பல படங்களை வெளியிட்டனர்.

படத்தின் காப்புரிமை STARECAT

உலகில் மிகவும் வலிமையானவர்களாகக் கருதப்படும் இந்த இரு தலைவர்களுக்கு இடையில் நடைபெறும் கலந்துரையாடலை முன்னிட்டு டிவிட்டர் பதிவுகளில் நகைச்சுவை மற்றும் கணினி மென்பொருட்களின் உதவியோடு திருத்தப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்திற்கு முன்பாகவே, இந்த இருவருக்கு இடையிலான உறவு கடந்த பல மாதங்களாக ஊகிக்கப்பட்டு வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டாலும், அமெரிக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா மிகவும் ஆதரவு காட்டியதாக எழுந்த பார்வையாலும் இந்த இரு தலைவர்களுக்கு இடையிலும் தொடர்பு இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை FILMYSTIC/@THEJETSETER/TWITTER

குறிப்பாக, இந்த இரு தலைவர்களுக்கு இடையிலான உறவு பற்றி விமர்சிப்போர், ஜெர்மனியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னர் புதின், அதிபர் டிரம்பை அவருடைய ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்வது போல படங்களை பகிர்ந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

டிரம்பும், புதினும் ஹாம்பர்க்கில் கேமராக்களுக்கு முன்னால் தோன்றியபோது, கைகுலுக்கியும், புன்னகைத்தும் கொண்டனர். இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தைகள் நன்றாகவே நடந்தன என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை @TODD_SPENCE/TWITTER

சிரியா நெருக்கடி மற்றும் உக்ரைன் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும், இருவரும் பரஸ்பர புரிதலும், அன்பும் கொண்டுள்ளதாக காட்டும், டிரம்பும் புதினும் முத்தமிடுவது போன்று உருவாக்கப்பட்ட இந்தப் படம் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் பற்றி புதின் கொண்டிருக்கும் பார்வைகளால் புதின் பாதுகாப்பாக இருக்கிறார். "புதிய கருத்து" கொண்ட "நேரிடையான, வெளிப்படையான" மனிதர் என்று ஜூன் மாதம் புதின் அமெரிக்க அதிபர் பற்றி தெரிவித்த கடைசி கருத்தாகும்.

படத்தின் காப்புரிமை @PAULREVERE42/TWITTER

சமீபத்தில் டிரம்ப் கருத்துக்கள் கூறாமல் சற்று ஒதுங்கி இருந்தாலும், ரஷ்ய அதிபர் தெரிவித்தற்கு சமமான கருத்துக்களையே டிரம்பும் தெரிவித்திருக்கிறார்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற 20 நாடுகள் குழு கூட்டத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களில் 76 காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்.

ட்ரம்ப் புடின் முதல் சந்திப்பு: அமெரிக்க - ரஷ்ய உறவு மேம்படுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ட்ரம்ப் புடின் முதல் சந்திப்பு: உறவு மேம்படுமா?

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்