ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்!

.

படத்தின் காப்புரிமை Blath

இந்தக் கட்டுரை பெரியவர்களுக்கான கருப்பொருளுடன், சில கடுமையான வார்த்தைகளையும் தொடக்கத்தில் கொண்டுள்ளது

பிரார்த்தனை கூட்டத்தின்போது, கத்தோலிக்கர்கள் அவர்களின் நெற்றி, உதடுகள் மற்றும் இதயத்தின் குறுக்கே சிலுவை போல செய்து கொள்வது வழக்கம்.

"அவ்வாறு அந்த சிறுமிக்கு தங்க முலாம் பெயின்டால் செய்தேன்," என்று என்னிடம் ப்ளாத் கூறினார். "நான் பிறகு அவரை மரத்தில் கட்டி புணர்ச்சியடையச் செய்தேன்."

23 வயது புகைப்பட மாணவியான ப்ளாத், தன்னை மென்மையான இதயம் கொண்ட "கிழக்கு லண்டன் நகரத்து விந்தை" (Cockney queer) என்று விவரித்துக் கொள்வார்.

படிக்காத நேரத்தில், ஆபாச கைவினை ஒப்பனையில் ப்ளாத் தன்னை மும்முரமாக்கிக் கொள்வார்.

அவரது படங்கள் "அழகானவை" என்று மக்கள் அடிக்கடி கூறுவர் - ஆபாசத்துடன் இணைத்து ஒரு வார்த்தை கூட அதில் இருக்காது.

ரோஜா இதழ்கள் நிறைந்த குளியல்தொட்டியில் சுயஇன்பம் காண்பது போல அல்லது மற்றொரு பெண் மீது மெதுவான ஓட்டத்தில் சொட்டுச் சொட்டாக ஒழுகும் மெழுகு, என அவரது படங்கள் இருப்பது வழக்கம்.

அந்த படங்கள் ஸ்காட்டிஷ் க்வீர் சர்வதேச திரைப்பட திருவிழாவில் மட்டுமின்றி பெர்லின் மற்றும் லண்டன் ஆபாச பட திருவிழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளன.

"நான் செய்வது ஆபாசம் அல்ல, அது ஒரு கலை என என்னிடம் ஏராளமான மக்கள் கூறுகின்றனர்" என்று அவர் கூறுகிறார். "ஆனால் கேமரா முன்பு பாலியலில் மக்கள் ஈடுபட்டால் அது ஆபாசம்" என்கிறார் அவர்.

இந்தத் துறைக்குள் வித்தியாசமாக எதையாவது கொண்டு வரும், வளரும் ஆபாச பட இயக்குநர்களில் ப்ளாத்தும் ஒருவர்.

பல விருதுகளைக் குவிக்கும் எரிகா லஸ்ட், ஜாக்கி செயின்ட் ஜேம்ஸ், ஜோன்னா ஏஞ்சல் மற்றும் ஐம்பது வயதைக் கடந்த முன்மாதிரி நடிகையாக இருந்து இயக்குநரான நினா ஹார்ட்லி உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.

கிழக்கு லண்டனில் முதன்மையாக தனது தாயாரால் வளர்க்கப்பட்டவர் ப்ளாத், தான் படித்த அனைத்து பெண்கள் கத்தோலிக்க உயர்நிலை பள்ளியில் இடம்பெற்ற ஒரேயொரு தற்பாலீர்ப்பாளராக (Gay) இருந்தார் - அந்த அனுபவத்தை மிகவும் பயங்கரமானது என்று ப்ளாத் விவரிக்கிறார்.

ஒரு தருணத்தை பற்றி அவர் என்னிடம் கூறுகையில், "தனது பள்ளி பையில் யாரோ ஒருவர் "கட்டுடல்" என்று பெரிய எழுத்துகளில்" குறிப்பிட்டுள்ளனர் என்றார்.

தீவிரமாக செயல்பட்ட ஆரம்ப காலத்தில், அந்த பையை அவர் தொடர்ந்து பயன்படுத்தினார்.

தன்னை இளமையாக ப்ளாத் கருதுவதால்தான், "ஆச்சர்யம் ஏற்படுத்தாத வகையில்" படங்களை இயக்குவதை நிறுத்தி விட்டு, ஆபாசத்தில் நடிக்க அவர் தொடங்கினார்.

படத்தின் காப்புரிமை Alamy

ஆனால், எவ்வாறு மத அடிப்படையிலான கல்வி முறையில் இருந்து விந்தையான ஈடுபாட்டுக்கும் ஆபாசத்துக்கும் ப்ளாத்தால் எவ்வாறு செல்ல முடிந்தது? என்பது எனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயம்.

பதினெட்டு வயதில் ப்ளாத், பிரின்ஸ் அல்லது செர் போல தனது முதலாவது பெயரிலேயே அழைக்கப்படலானார் - சிறுமிகள் தங்களின் படங்கள் மற்றும் விடியோக்களை தாங்களாகவே எடுத்து பதிவேற்றம் செய்வதற்காக "மாற்று ஆபாசம்" என்ற பெயரிலான இணையதளத்தை உருவாக்கினார்.

அதன் மூலம் இணையதளத்தில் பெண்களால் ப்ளாத் ஈர்க்கப்பட்டார். உடம்பில் பச்சைகுத்துதல், அடையாள துளையிடுதல், வித்தியாசமாக தலைமுடி வளர்த்தல் மற்றும் வெவ்வேறு உடல் வகைகளை அவர்கள் அடையாளமாக அவர்கள் கொண்டிருந்தனர். - அரிதாக முக்கிய ஊடகங்களில் வரும் இதுபோன்ற பெண்கள், ஆபாச உலகில் தனித்து விடப்பட்டனர்.

அவ்வாறு விடியோக்களில் இடம்பெறும் பெண்கள், அவர்களின் சொந்த உள்ளடக்கத்துக்கு அவர்களே பொறுப்பாளியாக இருப்பது அந்த இணையதளத்தின் மிகப்பெரிய ஈர்ப்பாகும்.

அதன் மூலம் அவர்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் அவர்கள் என்ன செய்யக் கூடாது என்பதை அவர்களே தெளிவாக முடிவெடுக்க முடிந்தது.

"அது மிகவும் அற்புதமானதாக இருந்ததாகக் கருதுகிறேன்! நீங்கள் விரும்பும் அளவுக்கு படைப்பாளியாகவும், அசிங்கமாகவும், தீவிரமாகவும் இருக்கலாம்," என்கிறார் ப்ளாத். "நீங்கள் நிர்வாண கோலத்துக்கு மாறிவிட வேண்டும். மற்றவை உங்கள் முடிவுக்கே விடப்படுகிறது.

நிர்வாண கோலத்தில் உள்ளவர்களை படம் எடுக்க வேண்டும் என்பதால், தனது சொந்த உடலை படங்களாக எடுக்க பயிற்சி எடுத்துக் கொண்டு வருவதாகவும் ப்ளாத் கூறினார்.

இதுபோன்ற செயலில் ஈடுபடுவதற்காகவே ஒரு பெண்கள் சமூகம் உள்ளது. அதற்காக அவர்களுக்கு பணமும் கொடுக்கப்படுகிறது.

விடியோக்களை எவ்வாறு எடுப்பது, அவற்றை எவ்வாறு இணையதளத்துக்கு பயன்படுத்துவது என தனக்குத் தானே அவர் பயிற்சி செய்து கொள்கிறார்.

படத்தின் காப்புரிமை Blath

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் உணர்ச்சி மிக்க, எப்போதும் வளர்ந்து வரும் ரசிகர் கூட்டத்துக்காக அவர் அவ்வாறே செயல்பட்டு வருகிறார்.

"நான் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் அதுபற்றி நிச்சயமாக எனக்குத் தெரியும்" என்று அந்த பேட்டியின்போது நிகழ்ச்சியை வழங்கிய ரியாத் கலாஃப் ப்ளாத்திடம் கூறினார். "ஆனால் சில நேரங்களில் நானும் அப்படித்தான், இது ஒரு வகை சூடான விஷயம்" என்கிறார்.

தனது ஆபாச படங்களை விட, இசை விடியோக்கள் மீதான தமது பணியை ப்ளாத் விரும்புகிறார். படத்தில் அழகான அந்த இசை இருக்க வேண்டும் என விரும்புவதாக அவர் கூறுகிறார்.

ஒரு வழக்கமான ஆபாச படம், அசிங்கமான காட்சிக்கு செல்லும் முன்பாக அதில் ஈர்ப்பு இல்லாத வசனம் இடம்பெறும். அந்த அனுபவத்தை தமது கலைஞர்களுக்காக மிகவும் அதிகமாக தனிப்பட்ட முறையில் ப்ளாத் பதிவு செய்வார்.

ஒவ்வொரு முறை படப்படிப்பு தொடங்கும் முன்பும், ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புகளை அவர்களுடன் அமர்ந்து விவாதிப்பர்.

உதாரணமாக "சிலருக்கு கூசும் கைகள் இருக்கும்". "உங்கள் விரல்களை அவர்கள் மீது கீழ்நோக்கி வருடச் செய்தால், அவர்கள் சிரித்து படப்பதிவை வீணடித்து விடுவர்."

படத்தின் காப்புரிமை Blath

தொழில்சார்ந்த ஒரு விடியோ கலைஞர் (ஒளிப்பதிவாளர்) கையாளும் அதே பாணியை படப்பிடிப்பின்போது ப்ளாத் அணுகுகிறார்: படத்தின் கருத்தாக்கத்தை முடிவு செய்து விட்டு, அத்துறை பற்றி ஆழ்ந்து சிந்திப்பது, கேமரா கோணங்களை விவாதிப்பது மற்றும் காட்சி பதிவு செய்யப்பட்ட பிறகு, மிகக் கவனத்துடன் ஒவ்வொரு காட்சியாக சரிபார்ப்பது அதில் அடங்கும்.

தனது தயாரிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு, "அற்புதமாக இருக்கும்" என்று ப்ளாத் கூறுகிறார்.

சமூக ஊடக ரசிகர்களிடம் இருந்து தினமும் அவருக்கு சுமார் 65 ஆயிரம் தகவல்கள் வருகின்றன.

ப்ளாத்தின் குறிப்பிடத்தக்க படங்களுக்கும், திரைப்படத்துறை பெரும்பாலும் ஒதுக்கியோ அல்லது போகப் பொருளாகவோ காட்சிப்படுத்தும் விந்தை மக்களை தனது படத்தில் உள்ளடக்கியதற்காகவும் நன்றி தெரிவித்து அவர்கள் தகவல்களை அனுப்புகின்றனர்.

"பெண்களை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் உங்களின் பணியை ஒரு ஆணால் படமாக்க முடியாது, இதுபோன்ற எந்தவொரு ஆபாச படத்தை நான் இதுவரை பார்த்தது கிடையாது" என்று ஒரு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ளாத் "சந்தேகத்துக்கு இடமின்றியும் என்றென்றும்" தன்னை ஒரு பெண்ணியவாதியாகவே கருதிக் கொள்கிறார்.

கலைஞர்களை தள்ளிவிடும் நிறுவனங்களின் எல்லைகளையும் அனுமதியையைும் அவர் எதிர்க்கிறார். ஆனால், அதன் விளைவாக ஒட்டுமொத்த ஆபாச பட உலகுக்கு களங்கம் கற்பிக்க பயனுள்ளதாகவோ அல்லது முற்போக்கு நடவடிக்கையாகவோ அதை ப்ளாத் பார்க்கவில்லை.

"தனி நபர்களின் செயல்பாடுகளை நெருக்கமாக நாம் பார்க்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த திரையுலகையும் பற்றி தவறாக எழுத முயலக் கூடாது" என்று அவர் கூறுகிறார்.

மாற்று ஆபாசம் என்பது ஈர்க்கக் கூடியதாக உள்ளது. மேலும், "கலைஞர்களுடன் தங்களுக்கு ஏதோ தொடர்பு உள்ளதாக மக்கள் நினைப்பது"தான், அதில் மிகவும் பிரபலமாகி வரும் விஷயம் என்கிறார் ப்ளாத்.

பிரதானமான ஆபாச கலைஞர்கள் பலரும் தற்போது "ஒரு பகுதி (நேரலை வெப் காட்சிகளில்) புணர்ச்சியில்" பண தேவைக்காகவும், ரசிகர்கள் தங்களுடன் பேச வேண்டும் என்பதற்காகவும் ஈடுபடுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Blath

ஆபாச பட தொழிலில், சமூக ஊடகத்தின் வளர்ச்சியும் "மிகப் பெரிய விஷயம்" ஆக பார்க்கப்படுகிறது.

கலைஞர்கள் நகைச்சுவையில் ஈடுபடுவது அல்லது அவர்களின் நண்பர்களுடன் பேசுவதை ரசிகர்களால் பார்க்க முடிவது, கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு பாலமாக உள்ளது.

"பாலியல் என்பது உணர்ச்சிமயமானது. அது வெறும் உடலியல் மட்டுமல்ல. அது ரசாயனம் மற்றும் சமூகம் சார்ந்ததும் கூட" என்கிறார் ப்ளாத்.

ப்ளாத்தின் படங்களும், அத்தகைய சூழ்நிலை மீது கடுமையாக கவனம் செலுத்திப் பிரதிபலிக்கவே முயற்சிக்கின்றன - ஏனென்றால் "உண்மையான உலக பாலியல் எப்படி இருக்கும்" என்பதை அதுதான் உணர்த்துகிறது.

தன்னை ஒரு முன்னோடியாக ப்ளாத் பார்க்கவில்லை. ஆனால், தன் முன் வரும் விந்தை கலைஞர்களின் பணியை அவர் தொடர்ந்து ஆற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

"பார்வையின் நோக்கம்தான் மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்" என ப்ளாத் கூறுகிறார்.

அனைத்து வகை அதிகப்படியான மக்கள், தங்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்வதும், மற்றும் பொதுவாக இதுபோன்ற முயற்சியில் சேர்த்துக் கொள்ளப் பொது மக்களிடையே இந்த கலையை கொண்டு செல்வதும் மிகவும் முக்கியம்."

"விந்தை உடல்கள், விந்தை வாழ்க்கை, விந்தை பாலியல்" போன்றவற்றை நீண்ட காலத்துக்கு படமாக்க முடியும் என ப்ளாத் எதிர்பார்க்கிறார். "வேற்றுமையில்தான் எல்லாமே உள்ளது" என்கிறார் அவர்.

(சந்திப்பு - நிக் அர்னால்டு)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்