செளதி ஆயுத ஏற்றுமதி குறித்து பிரிட்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

  • 10 ஜூலை 2017

பிரிட்டனில் இருந்துசெளதி அரேபியாவிற்கு ஆயுத ஏற்றுமதி செய்யப்பட்டது சட்டபூர்வமாக செல்லத்தக்கதா என்பது குறித்த தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை EPA

இந்த வழக்கைத் தொடுத்த 'ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான இயக்கம்' (Campaign Against the Arms Trade) என்னும் பிரசாரக் குழு , ஏமன் நாட்டில் ஹூதி போராளிகளுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியா நடத்திய வான் வழி தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், அத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு விற்றதன் மூலம் ஐக்கிய ராஜ்ஜியம் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி விட்டதாகவும் வாதிட்டுள்ளது.

ஆனால் இக்கூற்றை பிரிட்டன் அரசு மறுத்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஐக்கிய ராஜ்ஜியம், சவுதி அரேபியாவிற்கு மேற்கொண்டு ஆயுத விற்பனை செய்வதை இடைநிறுத்தக்கூடும். பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இந்த வர்த்தகம், ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கிறது.

பிற செய்திகள்:

பருத்தித்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இருவர் பணி இடைநீக்கம்

அமெரிக்காவிற்குச் செல்லும் மேலும் இரண்டு விமான சேவைகளில் லேப்டாப் தடை நீக்கம்

கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்