தேர்தலுக்கு முன்பு ரஷ்ய வழக்கறிரை சந்தித்த டிரம்ப் ஜுனியர்

  • 10 ஜூலை 2017

ரஷ்ய அரசுடன் (கிரெம்ளின் மாளிகை) தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவரை கடந்த ஆண்டு சந்தித்ததை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன், டொனால்ட் டிரம்ப் ஜுனியர் ஒப்புக்கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அமெரிக்கர்கள் ரஷ்ய குழந்தைகளை தத்தெடுக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டதை விவாதித்தோம் - டிரம்ப் ஜுனியர்

இந்த சந்திப்பு, ரஷ்ய நாட்டவருக்கும் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய வட்டத்தின் உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் நடைபெற்ற முதல் உறுதிப்படுத்தப்பட்ட சந்திப்பாக கருதப்படுகிறது.

கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் செல்வாக்கு செலுத்த ரஷ்யா முயற்சித்ததாக கூறப்படும் நிலையில், இதற்கு டிரம்பின் அணியினர் ரகசியமாக இணைந்து செயல்பட்டார்களா என்பதை ஒரு சிறப்பு வழக்கறிஞர் விசாரணை செய்கிறார்.

தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை என டிரம்ப் ஜூனியர் மற்றும் ரஷ்ய வழக்கறிஞர் ஆகியோர் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராக தேர்வான இரண்டு வாரங்கள் கழித்து ஜூன் 9-ம் தேதி நியூயார்கில் உள்ள டிரம்ப் டவரில், ரஷ்ய வழக்கறிஞர் நடாலியா வெசெல்னிட்ஸ்காயா உடன் டிரம்ப் ஜுனியர், டிரம்பின் மருகன் ஜாரெட் குஷ்னெர் மற்றும் அப்போதைய பிரசார குழு தலைவர் பால் ஜே மான்ஃபோர்ட் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

அமெரிக்கர்கள் ரஷ்ய குழந்தைகளை தத்தெடுக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டது குறித்து இருவரும் விவாதித்ததாக டிரம்ப் ஜுனியர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அந்த நேரத்தில் பிரசார பிரச்சினை குறித்தும் எந்த பின் தொடரல் குறித்தும் பேசவில்லை” என அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Spencer Platt/Getty Images

பாதுகாப்பு அனுமதிக்கான படிவங்களில், இச்சந்திப்பு குறித்து குஷ்னெர் முன்னரே தெவித்திருந்ததாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் ரஷ்ய அதிகாரிகளின் விசாக்களை நிறுத்தவும், சொத்துக்களை முடக்கவும் அனுமதியளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் வாக்களித்ததை தொடர்ந்து, 2012-ம் ஆண்டு தத்தெடுப்பு திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்தி வைத்தார்.

இச்சட்டத்திற்கு எதிராக நடந்த பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்த நடாலியா வெசெல்னிட்ஸ்காயா, “அதிபர் பிரசாரம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை” என கூறுகிறார்.

பிற செய்திகள்

“ரஷ்ய அரசின் சார்பில் நான் ஒருபோதும் செயல்படவில்லை மற்றும் ரஷ்ய அரசின் எந்தவொரு பிரதிநிதியுடனும் இந்த விஷயங்கள் பற்றி ஒருபோதும் கலந்துரையாடவில்லை” என அவர் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவை தவிர வேறு நாடுகளும் கடந்த காலங்களில் தலையிட்டிருக்கலாம் என்றும், இத்தலையீடு நீண்ட காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் கடந்த வாரம் டிரம்ப் கூறினார்.

100 நாட்கள் ஆட்சியில் டிரம்ப் என்ன செய்தார்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
100 நாட்கள் ஆட்சியில் டிரம்ப் என்ன செய்தார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :