பிரிட்டனில் குறைந்த விலையில் விமான ஓடுபாதைகளை அமைக்கவிருக்கும் இந்தியர்

அரோரா குழுமத்தின் நிறுவகர் சுரிந்தர் அரோரா

பிரிட்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைப்பதற்காக பிரிட்டனில் வசிக்கும் இந்தியர் உருவாக்கிய திட்ட மதிப்பீட்டை கேட்ட அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். விமான ஓடுபாதை திட்டத்தை முன்வைத்த அரோரா குழுமத்தின் நிறுவகர் சுரிந்தர் அரோராவின் திட்ட மதிப்பீடு, தற்போதைய திட்டத்தைவிட 6.7 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் குறைவானதாக இருக்கும்.

பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் ஃபாஜில்கா மாவட்டத்தில் பிறந்த சுரிந்தர், தொழிலில் குறுகிய காலத்திலேயே நல்ல பெயரை சம்பாதித்துவிட்டார். பிரிட்டனின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

தத்து எடுத்தார் அத்தை

மூத்த சகோதரன் பிறந்து 16 ஆண்டுகள் கழித்து 1958ஆம் ஆண்டு சுரிந்தர் அரோரா பிறந்த இரண்டு-மூன்று நாட்களுக்குள் அவரது அத்தை, தத்தெடுத்துக்கொண்டார். நான் தவறுதலாக பிறந்துவிட்டவன் என்று ஒரு பேட்டியில் அவர் ஹாஸ்யமாக சொல்லியிருப்பார். சுரிந்தரின் பெற்றோர் லண்டனில் வசித்துவந்த்தால், அவர்களை லண்டன் அங்கிள் - ஆண்ட்டி என்று அழைப்பாராம்.

படிப்பில் சுமார்

படத்தின் காப்புரிமை Getty Images

பஞ்சாபில் குழந்தைப் பருவத்தை கழித்த சுரிந்தருக்கு 13 வயதுவரை படிப்பு என்றால் எட்டிக்காயாய் கசக்குமாம். எட்டாவது படிக்கும்போது, அவருக்கு சரியாக எழுத படிக்கக்கூட தெரியாது! 1972 ஆம் ஆண்டில் பெற்றோர் அவரை லண்டனுக்கு அழைத்துச் சென்றனர்.

லண்டன் சென்ற பிறகு தான் அவர்கள் தனது அத்தை மாமா இல்லை, உண்மையான பெற்றோர்கள் என்று சுரிந்தருக்கு தெரியவந்தது. "அப்போது எனக்கு என்ன தோன்றியது தெரியுமா? நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி! எனக்கு இரண்டு அம்மா, இரண்டு அப்பா" என்று சுரிந்தர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

போலீசாக வேண்டும் என்ற ஆவல் சுரிந்தருக்கு இருந்தாலும், விமான ஓட்டியாகவோ, கணக்காளராகவோ அவர் வரவேண்டும் என்பது நிதி ஆலோசகர்களாக பணிபுரிந்த சுரிந்தரின் பெற்றோரின் விருப்பமாக இருந்தது.

வேலை

1977இல் பிரிட்டன் ஏர்வேசில் ஜூனியர் கிளார்க்காக பணியில் சேர்ந்த சுரிந்தர் அரோராவின் முதல் வார சம்பளம் 34 பவுண்டுகள். விமான ஓட்டி உரிமம் பெறுவதற்காக பணம் தேவைப்பட்டதால், ஒரு ஹோட்டலில் பகுதி நேர மது பரிமாறுபவராக பணிபுரிந்தார். 1982 வரை அந்த ஹோட்டலில் வேலைபார்த்தார்.

அதே சமயத்தில், நிதி ஆலோசகராக பணிபுரிவதற்கான பயிற்சியையும் பெற்றோரிடம் இருந்து பெற்ற சுரேந்தர் 19982இல் தொழில் தொடங்கினார், அடுத்த மாதமே சுனிதாவை மணம்முடித்தார்.

அரோரா குழுமத்தை சம்ராஜ்ஜியமாக விரிவாக்குவதில் சுனிதா அரோராவின் பங்கு மிகவும் முக்கியமானது. சுமார் 11 ஆண்டுகள் பிரிட்டன் ஏர்வேஸில் பணிபுரிந்த சுரிந்தர் 1988இல் பணியில் இருந்து விலகினார்.

நிலம் மற்றும் மனை வர்த்தம்

படத்தின் காப்புரிமை Getty Images

ஹீத்ரூ விமானநிலையத்தின் அருகே சில வீடுகளை பார்த்த சுரிந்தருக்கு அவை பிடித்துப்போனது. 15-16 ஆண்டுகளாக யாருமே வசிக்காமல் இருந்த இரண்டு வீடுகளை ஏலத்தில் வாங்கி விருந்தினர் விடுதிகளாக மாற்ற முடிவு செய்தார் சுரிந்தர். அந்த காலகட்டத்தில் ஹோட்டல்கள் அதிகமாக இருந்தபோதிலும், விருந்தினர் விடுதிகள் இல்லை.

`ஹீத்ரூ ஸ்டைண்ட்பை அகாமடேஷன்` என்று விருந்தினர் விடுதிக்கு பெயரிட்டார். சுரிந்தரின் மனைவி, தனது சமையலறையிலேயே ஹாட்லைன் தொலைதொடர்பு வசதியை வைத்துக்கொண்டு, தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டே, விடுதிக்கு பதிவு செய்ய வரும் அழைப்புகளையும் கவனித்துக்கொள்வார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் சில பணியாளர்களிடம் பேசிய சுரிந்தர், அவர்களுக்கு ஹோட்டலில் சிறப்பான சேவைகள் கிடைக்கவில்லை என்பதை தெரிந்துக்கொண்டு, விமானநிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்.

சுரிந்தரின் திட்டத்தை விமான நிறுவனம் நிராகரித்துவிட்டது. ஹில்டன் அல்லது மேர்ரியாட் போன்ற ஹோட்டல்களையே அது விரும்பியது.

துரித வளர்ச்சி

படத்தின் காப்புரிமை Getty Images

1999இல் சுரிந்தர் ஒரு நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் ஹோட்டலை கட்டினார். பிறகு இரண்டு ஆண்டுகளில் 2001இல் இரண்டாவது ஹோட்டல் என தொழில் விரிவடைந்தது. கடனுக்காக தனது சொத்துக்க்களின்மேல் கடன் வாங்கினார், நிறைய பணம் முதலீடு செய்தார்.

தொழிலில் எவ்வளவு வளர்ந்தாலும், ஹீத்ரூவுக்காக ஒரு ஹோட்டல் கட்டவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உள்ளுக்குள்ளே கனன்றுக்கொண்டே இருந்தது.

ஆனால் மீண்டும் ஹீத்ரூவால் நிராகரிக்கப்பட்ட சுரிந்தர், லட்சியத்தை அடையும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டார்.

இறுதியில் 2004ஆம் ஆண்டில் 'எக்கோர் சாஃபிடேல்' நிறுவனத்துடன் இணைந்து தனது லட்சியத்தை அடைந்தார் சுரிந்தர். ஹீத்ரூ விமான நிலையத்திற்காக ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்கான ஏலத்தில், மேர்ரியாட் குழுமத்தை பின்தள்ளிவிட்டு, அரோரா குழுமம் ஏலத்தை வென்றது.

158 மில்லியன் பவுண்டு நிறுவனத்தின் நிறுவகர் சுரிந்தர் அரோரா 'லண்டன் ஸ்கில்ஸ் அண்ட் எம்ப்ளாய்மெண்ட்' வாரியத்தின் உறுப்பினர், 'வெண்ட்வர்த் கோல்ஃப் கிளப்'பின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :