மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்

  • 12 ஜூலை 2017

இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பிடமிருந்து இராக்கின் மொசூல் நகரை மீட்டுவிட்டதாக அரசு படைகள் அறிவித்திருந்தாலும், அங்கே இன்னமும் மூவாயிரம் பேர் சிக்கியிருப்பதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தம் குடும்பங்களிடமிருந்து பிரிந்த குழந்தைகள் உள்ளிட்ட இளம்பிராயத்தவர் அல்லது வயோதிகர்கள். பெற்றோரை இழந்த குழந்தைகளின் அழுகுரல் மட்டுமே அங்கே பல பகுதிகளிலும் எதிரொலிப்பதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஐஎஸ் அமைப்பினருக்கும் இராக்கிய இராணுவத்துக்கும் இடையில் இன்னமும் நகரின் சில இடங்களில் மோதல்கள் தொடர்கின்றன.

நகரில் இருந்து பாதுகாப்பு தேடிச்செல்பவர்களின் எண்ணிக்கையும் நீடித்தபடி இருக்கிறது.

அங்குள்ள நிலவரம் குறித்த பிபிசியின் நேரடித்தகவல்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :