ஐரோப்பாவுக்கு சீனாவின் புதிய பட்டுப்பாதை உதவியா? உபத்திரமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐரோப்பாவுக்கு சீனாவின் புதிய பட்டுப்பாதை உதவியா? உபத்திரமா?

  • 13 ஜூலை 2017

சோவியத் யூனியன் காலத்துக்கு பிறகு, மேற்குலகில் தனது ஆளுமையை செலுத்த விரும்பும் சீனாவின் கவனம் கிழக்கு ஐரோப்பா பக்கம் திரும்பியுள்ளது.

வியேஸ்லாவும் அவரது மகன் ரவேலும் ஒருநாளு தமது போலிஷ் நிலங்களை சீன முதலீட்டாளர்களுக்கு விற்கமாட்டார்கள். அதேநேரம் சீனர்களுக்கு தமது பால் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் தொழிலை விரிவடையச் செய்யப்போவதாக ரவேல் கூறுகிறார்.

ஐரோப்பாவில் பால் பொருட்களுக்கான சந்தை சுறுங்கிவரும் நிலையில், மாற்றுச் சந்தைகளை வியெஸ்லாவ் போன்றோர் பரிசீலிக்கின்றனர்.

ஆனால் சீனாவின் சந்தைகள் இன்னும் திறக்கப்படவில்லை. சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு பிறகு, சீனா ஐரோப்பாவில் மலிவாக கிடைக்கும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறது.

இப்போது இங்கு கட்டமைப்பை ஏற்படுத்தி, வர்த்தக தொடர் சங்கிலியை பலமாக்க சீனா விழைகிறது. அது சீன அரசால் உந்தப்பட்ட எண்ணம் சந்தை வர்த்தகத்தால் அல்ல. இந்நிலை ஆபத்தானது என்று சில பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Image caption ஐரோப்பாவில் கட்டமைப்பை ஏற்படுத்தி, வர்த்தக தொடர் சங்கிலியை பலமாக்க சீனா விழைகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுநர் செங்காங், ‘இது அரச நிறுவன்ங்கள் மூலம் திட்டமிடப்பட்டாலும், அதை அவற்றை அந்நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படப் போவதில்லை. அப்படி நடைபெறும்போது பெரிய அளவுக்கு வாராக்கடன்கள் அதிகரிக்கும். இதில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளதால், மிகவும் ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்லும்’ என்கிறார்.

எனினும் சீனாவின் எண்ணம் திட்டமிட்டபடி முன்னேறுகிறது. சோவியத் நாடுகளுக்கு கவச வாகன்ங்களைச் செய்த இந்த போலிஷ் தொழிற்சாலை, இப்போது சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு, மண்ணைத் தோண்டும் கருவிகளை செய்கிறது. இதன் மூலம் அந்த நிறுவனம் திவாலாவதிலிருந்து காப்பாற்றப்பட்டது. சீனாவின் புதிய பட்டுப்பாதை உள்நாட்டு நிறுவனங்களை காப்பாற்றும் என்று சிலர் நம்புகின்றனர்.

சீனாவில் காலூன்ற ஐரோப்பா முயன்று வரும் வேளையில், ஐரோப்பாவில் சீனா மேலும் மேலும் ஆழமாகத் தோண்ட ஆரம்பித்துள்ளது என்பதே உண்மை.

தொடர்புடைய செய்திகள் :

‘சீனாவின் பட்டுப்பாதையால் எமக்கு வளர்ச்சியில்லை’

சீனாவின் புதிய பட்டுப்பாதை அனைவருக்குமான ஒரு வாய்ப்பா?

சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: உலகை ஆளுமைப்படுத்தும் உள்நோக்கமா?

சீனா உருவாக்கும் புதிய துபாய்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :