மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா?

  • 14 ஜூலை 2017

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவுள்ள நிலையில், சீனாவின் சந்தைகள் பிரிட்டனுக்கு திறக்குமா?

சீனாவிலிருந்து பிரிட்டன் வரையிலான ஏழாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கான ரயில்பாதை அது கடந்து செல்லும் நாடுகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பிபிசி கடந்த சில நாட்களாக ஆராய்ந்தது.

ஒருகாலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடையாளமாக இருந்த ரயில் போக்குவரத்தில் இப்போது சீனா ஆளுமை செலுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு புதிய சந்தை வாய்ப்புகளை பிரிட்டன் எதிர்நோக்குகிறது. சீனாவின் பட்டுப்பாதை தமக்கு உதவும் என பிரிட்டன் கருதுகிறது.

Image caption ஒருகாலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடையாளமாக இருந்த ரயில் போக்குவரத்தில் இப்போது சீனா ஆளுமை செலுத்துகிறது.

சீனாவிலிருந்து ரயில் மூலம் மூன்று வாரங்களுக்கு முன்னர் பிரிட்டன் வந்த பொருட்கள் மீது சீனாவில் பெரிய ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. பிரிட்டிஷ் நிறுவனங்கள் சீனாவால் பலனடையும் எனும் ஒரு கருத்தும் நிலவுகிறது. அறுபது நாடுகள் வழியாக சீனா முன்னெடுக்கும் ரயில்பாதை கட்டுமானத்தில் தமக்குமொரு பங்கு கிடைக்கும் என் இங்குள்ள நிறுவன்ங்கள் நம்புகிறன.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அரூப் பொறியியல் ஆலோசனைக் குழுமத்தைச் சேர்ந்த பீட்டர் பட், ‘சுயலாபத்துக்காகவே சீனா இதை முன்னெடுக்கிறது எனும் எண்ணப்பாடு ஓரளவுக்கு இருக்கிறது. இது முன்காலத்து அனுபவத்தின் அடிப்படையிலானது. ஆனால் சீனா எவ்வளவோ மாறியுள்ளதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. நாம் நினைப்பதை விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதை பலர் உணரவில்லை’, என்கிறார்.

பழையப் பட்டுப்பாதை, பல நாடுகளைச் சேர்ந்த தனியார் வர்த்தகர்களால், சந்தர்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள முன்னெடுக்கப்பட்ட்து.

ஆனால் புதிய பட்டுப்பாதையோ சீன அரசு, அதன் பணம் மற்றும் அரசியல் பலத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது.

எதிர்பாராத வகையில் அத்திட்டம் தோல்வியடையுமானால், கசப்புணர்வுகள் மேலோங்கி, சீனா மீது கரைபடிந்து அதன் கடந்தகால பெருமையை மங்கச் செய்துவிடும்.