சீன மனித உரிமை செயற்பாட்டாளர் லியு சியாவ்போ உடல் அடக்கம்

  • 15 ஜூலை 2017
சீன மனித உரிமை செயற்பாட்டாளர் லியு சியாவ்போ உடல் அடக்கம் படத்தின் காப்புரிமை Handout

சீனச் செயற்பாட்டளரும், நோபல் பரிசுப் பெற்றவருமான லியு சியாவ்போ உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சீனாவின் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த லியு சியாவ்போ கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று இறந்தார்.

சீன அரசின் பிரபலமான விமர்சகராக இருந்து வந்தார்.

லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவருடைய மனைவி லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், லியு சியாவ்போவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட நகரான ஷென்யாங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி லியு சியா கலந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை RFA

"உள்ளூர் பழக்கவழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்" லியு சியாவ்போவின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

மொஸாட்டின் இரங்கற்பாட்டு லியு சியாவ்போவின் இறுதிச் சடங்கில் இசைக்கப்பட்டது.

சீனாவில் துக்கத்தின் அடையளமாக கருதப்படும் செவ்வந்திப்பூக்களால் சூழப்பட்டிருந்த லியு சியாவ்போவின் திறந்த சவப்பெட்டிக்கு அருகில், லியு சியாவும், துக்கம் அனுசரித்த உறவினரும் இருப்பதை உள்ளூர் அதிகாரிகளால் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.

லியு சியா மிகவும் வருத்தமடைந்திருப்பது இந்த புகைப்படங்களில் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Xiaoguai

லியு சியா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதே அதிகாரி தெரிவித்திருப்பதை, சியாவின் வழக்கறிஞர் ஜரெட் கென்சர் மறுத்திருக்கிறார்,

லியு சியாவின் கணவர் இறந்த்தில் இருந்து அவர் தனிக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.

"லியு சியாவை மீட்பதற்காக இந்த உலகமே உடனடியாக ஒன்று திரள வேண்டியுள்ளது" என்று அவர் தன்னுடைய அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லியு சியா பற்றி ஆழ்ந்த கவலை அடைவதாகவும், சீன அரசு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நோபல் பரிசு குழு வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறது.

மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :