அண்டார்டிக் பகுதியில் முதல்முறையாக நடைபெறும் திருமணம்

  • 17 ஜூலை 2017

அண்டார்டிக் ஆராய்ச்சியாளர்கள் இருவர், பிரிட்டிஷ் அண்டார்டிக் பகுதியில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

படத்தின் காப்புரிமை NEIL SPENCER/BAS

டாம் சில்வெஸ்டரும், ஜூலி பவும் அண்டார்டிக் தீபகற்பத்தின் மேற்கில் இருக்கும் அடேய்லயீட் தீவில் உள்ள ரோதரா ஆராய்ச்சி நிலையத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவர்களின் திருமணம் வார இறுதியில் நடைபெறும்; திருமணத்தை, ஆராய்ச்சி நிலையத் தலைவரும் பிரிட்டிஷ் அண்டார்டிக் பகுதியின் நீதிபதியுமான பால் சாம்வெஸ் நடத்தி வைப்பார்.

"அண்டார்டிகாவில்தான் எங்களின் திருமணம் நடைபெற வேண்டும் என்று இருந்தது போல் உணர்கிறோம் இதை விட சிறந்த இடம் இருக்க முடியாது" என்று மணப்பெண் பவும் தெரிவித்தார்.

ஆனால், அங்கு நல்ல வானிலையை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. உறைய வைக்கக்கூடிய குளிரும், மிக குறைந்த பகல் வெளிச்சமுமே இருக்கும்.

ஷெஃபீல்டை சேர்ந்த சில்வெஸ்டர் கூறுகையில், நாங்கள் அண்டார்டிகாவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முதலில் யாரோ கூறிய போது அது முடியாத காரியம் என்று நான் மறுத்துவிட்டேன் என்கிறார்.

"பால் சாம்வேஸ், நீதிபதி ஆதலால் இதனை நடத்தி வைக்க முடியும்; எனவே இது சாத்தியம் என்று தோன்றியதால் நானும் இதற்கு சம்மதித்தேன்" என்கிறார் சில்வெஸ்டர்.

பால், ஹேய்லி IV ஆராய்ச்சி நிலையத்தில் இருக்க வேண்டும் ஆனால் பனிக்கால பாதுகாப்பு காரணங்களுக்காக பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ஹேய்லி IVவை மூடியதால் அவர் ரோதேராவில் உள்ள குழுவுடன் சேர்ந்தார்.

சில்வெஸ்டரும் பவும் 11 வருடங்களாக சேர்ந்து வாழ்கின்றனர்; பனிக்காலத்தில் அண்டார்டிக் நிலையத்தை பராமரிக்கும் 20 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இருவரும் அடங்குவர்.

படத்தின் காப்புரிமை PETE BUCKTROUT/BAS

இவர்கள் மலையேற பயற்சி பெற்றவர்கள் மற்றும் ஆழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான 2016ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயில் பங்குபெற தேர்ந்தடுக்கப்பட்டவர்கள்.

இந்த திருமண நிகழ்ச்சியில் ஷாம்பையினுடன் கூடிய காலை உணவும், இசையுடன் கூடிய சிறியதொரு நிகழ்ச்சியும் நடைபெறும்.

"நாங்கள் எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சின்ன தொரு திருமண நிகழ்வைதான் விரும்பினோம்; ஆனால் பூமியில் உள்ள தொலைதூர இடத்தில் எங்கள் திருமணம் நடைபெறும் என நாங்கள் நினைக்கவில்லை" என தெரிவித்தார் சில்வெஸ்டர்.

சில்வெஸ்டரின் பெற்றோர்களால் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள முடியாது இருப்பினும் அவர்கள் மிகவும் "திகைப்படைந்துள்ளதாக" தெரிவித்தனர்.

இந்த திருமணம் பிரிட்டிஷ் அண்டார்டிக் பகுதியின் அரசாங்கத்தில் பதிவாகும் மேலும் இது பிரிட்டனில் செல்லுபடியாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்