கின்னஸ் சாதனையை முறியடிக்க ஃபின்லாந்தில் நீச்சல் வீரர்கள் நிர்வாண ஓட்டம்

  • 17 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை YLEISRADIO OYEVN

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக நீச்சலடிப்பதில் உலக சாதனையை முறியடிக்கும் ஒரு முயற்சியில் ஃபின்லாந்தில் நூற்றுக்கணக்கான நீச்சல் வீரர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக தண்ணீரில் நீந்தியுள்ளனர்.

கிழக்கு ஃபின்லாந்தில் நடைபெற்ற இசைத்திருவிழா ஒன்றில் பங்கேற்ற சுமார் 789 பேர் இன்று (சனிக்கிழமை) நிர்வாண நீச்சலில் ஈடுபட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

முன்பு ஆஸ்திரேலியாவில் இதே போன்று நடத்தப்பட்ட உலக சாதனையை ஒப்பிடும் போது, இந்த நிகழ்வில் கூடுதலாக மூன்று நீச்சல் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த சாதனையை கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பு உறுதிப்படுத்த காத்திருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றுப் பதிவுக்காக நிர்வாண நீச்சல் (காணொளி)

இந்த சாதனையை முயற்சிக்கும் நாடுகளில் ஃபின்லாந்து மூன்றாவது நாடாகும் என்று யேல் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

இதற்குமுன், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பிந்தைய முயற்சிகளில் சுமார் 300 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

குளிர்ந்த நீரில் சுமார் ஆயிரம் பேர் வரை இறங்குவார்கள் என்று விழா ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையோடு இருந்தனர்.

உடல் மீதான நேர்மறையான விஷயங்களை கொண்டாடும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்வாண நீச்சல் போட்டியில் 786 பேர் கலந்து கொண்டனர். இந்த உலக சாதனையை உடைக்கும் வகையில் தற்போது ஃபின்லாந்தில் இந்த நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது.

பொதுவெளியில் நீச்சலடிப்பது ஃபின்லாந்தில் ஒரு பாரம்பரியமாகும். அங்குதான் அவான்டூன்டி எனப்படும் ஐஸ் கட்டி போன்று உருகிய மேலடுக்கு மீது துளையிட்டு அதற்குள் நீச்சலடிப்பது ஃபின்லாந்தின் சுற்றுலா வாரியத்தால் ஆற்றலை அதிகரிக்கும் அனுபவம் எனக்கூறி ஊக்குவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்