ஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல்

  • 19 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் முன்பு வெளியில் அறிவிக்கப்படாத கூட்டம் ஒன்றில் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு அதிகாரபூர்வ அமர்விற்கு பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து வெள்ளை மாளிகை எதையும் வெளியிடவில்லை.

இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ''போலியான செய்தி'' என்று கூறி மறுக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் உதவிக்கு ரஷ்யா உதவியது என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனம் நம்புகிறது. ஆனால், அதனை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே போன்று டொனால்ட் டிரம்பும் ரகசிய அல்லது சட்டவிரோத ஒத்துழைப்பை நிராகரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மெலனியா டிரம்புடன் உரையாடும் புதின்

இந்த மாத தொடக்கத்தில் ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் நாடுகளின் தலைவர்களிடையே நடைபெற்ற தனிப்பட்ட விருந்தின் போது டிரம்ப் மற்றும் புதினின் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியாக இருந்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் அவருடைய அதிகாரபூர்வ மொழி பெயர்ப்பாளரும் உடனிருந்தார். இந்த கூட்டம் சுமார் ஒருமணி நேரம் நடைபெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பேச்சுவார்த்தையின் போது அதிபர் டிரம்ப்பை தவிர்த்து வேறு உதவியாளர்கள் யாரும் இல்லாதததால், கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த ஒரே தரப்பு தகவலை வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு டிரம்ப்பே வழங்கியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :