பெண்களை இழிவுபடுத்துவதாக ஆடி கார் விளம்பரத்தை விமர்சிக்கும் சீனர்கள்

  • 20 ஜூலை 2017
ஆடி கார் நிறுவனம் படத்தின் காப்புரிமை AUDI
Image caption மணப்பெண்ணின் மூக்கு, காது மற்றும் பற்களை அவரது மாமியார் சோதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஆடி கார் நிறுவனம், ஒரு விளம்பரத்தால் சீனாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆடியின் இந்த விளம்பரம் பாலியல் பாகுபாட்டுடன் (பெண்களை இழிவுப்படுத்துவது போல்) இருப்பதாக ஆயிரக்கணக்கான இணையப் பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

``ஒரு முக்கியமான முடிவினை கவனமாக எடுக்க வேண்டும்`` எனக் கூறி கார் வாங்குவதை மனைவியைத் தேடுவதற்கு ஒப்பிடும் வகையில் இந்த விளம்பரம் உள்ளது.

ஒரு பெண்ணின் திருமண நாளில், அப்பெண்ணின் மூக்கு, காது மற்றும் பற்களை அவரது மாமியார் சோதிப்பது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

சீனாவில், ஆடி காரை விளம்பரப்படுத்துவது உள்ளூர் கூட்டு பங்குதாரரின் பொறுப்பு என ஆடி செய்தித் தொடர்பாளர் ஒருவர் சவூத் சீனா மார்னிங் போஸ்ட்டிடம் கூறினார்.

மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உடன் சீனாவில் மிகப்பெரிய மூன்று கார் நிறுவனங்களில் ஒன்றாக ஆடி உள்ள நிலையில், ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடியை புறக்கணிக்க வேண்டும் என சிலர் கோரியுள்ளனர்.

ஓர் இணையப் பயன்பாட்டாளர் இதனை `` மோசமான விளம்பரம்`` எனக் கூறியுள்ளார். மற்றவர்கள் இந்த விளம்பரத்தை `` சகிக்க முடியாதது`` எனக் கூறுகிறனர்.

`` என் வாழ்நாளில் நான் ஆடி காரை வாங்கமாட்டேன்`` என ஒரு பயன்பாட்டாளர் கூறுகிறார். மற்றொருவர் இதனை ``அவலமான விளம்பரம்`` என கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AUDI
Image caption ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடியை புறக்கணிக்க வேண்டும் என சில சீனர்கள் கோரியுள்ளனர்

ஆண்களை இலக்கு வைக்கும் குழுவே இந்த விளம்பரம் வேலை செய்யும் என முடிவெடுத்திருக்கும் என பலர் கூறினார்கள்.

`` விளம்பரத்திற்கான யோசனை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஒளிபரப்பும் வரை இதில் ஒரு பெண்ணாவது பணியாற்றினாரா?`` என வெய்போ பயன்பாட்டாளர் ஒருவர் கேட்கிறார்.

ஏனெனில், மணமகளைத் திருமணம் செய்து கொள்ள மாமியார் தனது மகனுக்கு அனுமதியளிக்கும் காட்சி விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளதால், சமகால திருமண மதிப்புகள் குறித்த விவாதத்திற்கு இது வழிவகுத்துள்ளது.

சீனாவில் விமர்சனத்தைச் சந்திக்கும் விளம்பரங்களில் இது சமீபத்திய ஒன்றாகும்.

ஒரு கறுப்பு இனத்தவர் வாஷிங் மெஷினில் நுழைந்த பிறகு, வெள்ளைத் தோல் கொண்ட ஆசியனாக மாறி வெளியே வரும் காட்சியை டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் இடம்பெற வைத்ததற்காக, ஒரு சீன நிறுவனம் கடந்த ஆண்டு மன்னிப்பு கேட்டது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்