நீலமணிக்கற்களுக்காக நிர்மூலமாக்கப்படும் லீமர்கள்
நீலமணிக்கற்களுக்காக நிர்மூலமாக்கப்படும் லீமர்கள்
லீமர்கள் மடகாஸ்கரில் மட்டுமே வாழ்பவை.
ஆனால் அங்கே நடக்கும் சட்டவிரோத நீலமணிக்கல் சுரங்க நடவடிக்கைகள், லீமர்களில் மிகப்பெரிய ரகமான இண்ட்ரி லீமர்களை அழிவின் விளிம்புக்கு தள்ளியிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
சென்ற ஒரு ஆண்டில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சுரங்கத்தொழிலாளர்கள் நாட்டின் கிழக்கிலுள்ள தொலைதூர மழைக்காடுகளுக்குள் சென்று நீலமணிக்கற்களை தேடி சுரங்கங்களை தோண்டி வருகிறார்கள்.
ஏற்கனவே அழிவின் விளிம்பிலுள்ள இண்ட்ரி லீமர்களின் வாழ்விடங்கள் இதனால் மேலும் அழிவதால் இந்த இனமே அழிந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்