கொலைக்கு சாட்சியான கிளி!
அமெரிக்க மாநிலமான மிஷிகனில் கொலை வழக்கு ஒன்றில் தனது கணவரை ஐந்து முறை சுட்ட பெண்மணிக்கு எதிராக கிளி ஒன்று சாட்சி கூறியுள்ளது.

பட மூலாதாரம், ABC
2015ஆம் ஆண்டு `க்ளென்னா ட்யுரம்` என்ற பெண் தனது கணவர் மார்டினை தங்களது வளர்ப்பு கிளியின் முன் துப்பாக்கியால் சுட்டார்.
பின்பு அவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
அந்த கிளி பின்னர் பாதிக்கப்பட்டவரின் குரலில் "சுடாதீர்கள்" என்று கத்தியதாக ட்யுரமின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.
சாம்பல் நிறம் கொண்ட அந்த ஆப்ரிக்க கிளியின் பெயர் `பட்`; வழக்கு வாதிடும் முறைகளில் கிளியை ஈடுபடுத்தவில்லை.
வழக்கு வாதங்களுக்கு பிறகு 49 வயதாகும் ட்யுரம் மீது "திட்டமிட்டு கொலை" செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது; அவருக்கு அடுத்த மாதம் தண்டனை வழங்கப்படும்.
அந்த சம்பவத்தில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது ஆனால் அவர் பிழைத்துக் கொண்டார்.
தனது மகனின் மரணத்தில், அவரின் மனைவியின் "உணர்வற்ற" செயல் குறித்து சாட்சி கூறுவது "வேதனையாக" உள்ளது என மார்டினின் தாய் தெரிவித்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், கொலைக்கு சாட்சியான கிளி!
நீதிக்காக இத்தனை நாட்கள் காத்திருப்பது நியாயமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது `பட்` கிளியை வைத்திருக்கும் மார்டினின் முன்னாள் மனைவி கிறிஸ்டியானா தெரிவிக்கையில், கொலை நடந்த இரவன்று நடந்த பேச்சுவார்த்தையை கிளி திரும்ப திரும்ப சொன்னதாகவும், அது "சுடாதீர்கள்" என்ற வார்த்தைதான் என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
தம்பதியினர் பேசியதை அந்த கெட்ட வார்த்தை பேசும் கிளி ஒட்டுக் கேட்டிருக்கக்கூடும் என்றும் அதனால் அவர்களின் கடைசி வார்த்தையை திரும்பத் திரும்ப கிளி கூறுவதாகவும் மார்டினின் பெற்றோர் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் அது அங்கு இருந்திருக்கும் என்றும் அதனை ஞாபகம் வைத்துக் கொண்டு அதைச் சொல்கிறது என்றும் மார்டினின் தந்தை உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
அந்தப் பறவை எதை வேண்டுமானாலும் திரும்பச் சொல்லும். மேலும் அது அதிகமான கெட்ட வார்த்தை பேசும் என்று மார்டினின் தாய் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கில் கிளியை ஒரு சாட்சியமாக கருதுவது குறித்து முதலில் யோசித்த பிறகு அதனை நிராகரித்ததாக மிஷிகனில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் தெரிவிக்கிறார்.
ஆனால் பறவையை சாட்சியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்