'ஹோம் அலோன்' திரைப்பட நடிகர் 71-ஆவது வயதில் காலமானார்

படத்தின் காப்புரிமை Getty Images

ஹோம் அலோன் திரைப்படங்களில் நடித்த ஜான் ஹார்ட் தனது 71-ஆவது வயதில் காலமானார்.

கலிஃபோர்னியாவில், பல்லோ அல்டோவில் உள்ள விடுதி அறையில் ஹார்ட் இறந்து கிடந்தார் என திரைப்பட நட்சத்திரங்கள் குறித்து செய்திதரும் வலைத்தளமான `டிஎம்சி` தெரிவித்துள்ளது

சாண்டா க்ளாராவின் மருத்துவ பரிசோதகர் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

"முதுகில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை" நடந்த பிறகு அவர் அந்த விடுதியில் தங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

"நகரில் உள்ள விடுதி அறையில் ஒரு நபருக்கு மருத்துவ உதவி தேவை படுகிறது என்ற அழைப்பு வந்தவுடன் எங்கள் அதிகாரிகள் தீயணைப்பு துறையுனருடன் விரைந்து சென்றோம்" என பால்லோ அல்டோ போலிஸ் துறை தெரிவித்துள்ளது.

ஹார்ட் நிச்சயமாக இறந்துவிட்டார் என்றும், அது குறித்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில் இது சந்தேகத்திற்குரிய மரணம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திரைப்பயணமும், அர்ப்பணிப்பும்

1990களில் ஹோம் அலோன் படங்களில் மாக்காவ்லி குல்கின் கதாப்பாத்திரத்தின் தந்தையாக பீட்டர் மெக்காலிஸ்டர் கதாப்பாத்திரம் ஹேர்டின் மறக்க முடியாத கதாப்பாத்திரம் ஆகும்.

ஆனால், அவர் 1970களிலேயே நடிக்க தொடங்கிவிட்டார், மேடை நாடகங்களில் தொலைக்காட்சிகளில், மற்றும் படங்களில் நடித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter

அவர் கட்டர்ஸ் வே, சிஎச்யுடி மற்றும் கிளாடியேட்டர் போன்ற பல படங்களில் முக்கிய கதாப்பிரங்களில் நடித்துள்ளார். 1999ஆம் ஆண்டில் `தி சப்ரநோஸ்` தொலைக்காட்சி தொடரில் நியூ ஜெர்சியின் ஊழல்வாதி போலிஸ் துப்புறிவாளராக `வின் மகசியன்` கதாப்பிரத்தில் நடித்ததற்கு 1999ஆம் ஆண்டு ஹார்ட் எம்மா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

ஹார்டுடன் பணிபுரிந்த மார்லன் வேயன்ஸ், ஹேர்ட் ஒரு சிறந்த மனிதர், பலரை சிரிக்க வைத்துள்ளார். ஒரு நல்ல மனிதரை இவ்வாறு பார்ப்பது துயரமாக உள்ளது என்று இண்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்