ஃபார்முலா பால் முறை எவ்வாறு நவீன பணிச்சூழலை மேம்படுத்துகிறது?

  • டிம் ஹார்ஃபோர்ட்
  • பிபிசி உலகச்சேவை
ஃபார்முலா பால் முறை எவ்வாறு நவீன பணிச்சூழலை மேம்படுத்துகிறது?

பட மூலாதாரம், Getty Images

அது ஒரு பீரங்கித் தீ - கடற்கொள்ளையர் போல இருந்திருக்கலாம் - கிழக்கிந்திய பிரிட்டிஷ் கம்பெனியின் கப்பலான பெனாரஸ், இந்தோனேஷியாவின் சுலவேஸி தீவில் உள்ள மகாஸ்ஸர் துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதன் தலைவர், அந்த சத்தம் எங்கிருந்தது வந்தது என்பதை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

மூன்று நாள்களுக்குப் பின்னர், மவுண்ட் தம்போராவில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தின் சத்தத்தை மட்டுமே அவர்கள் கேட்டனரே தவிர, கடற்கொள்ளையர் யாரையும் அந்த கப்பல் குழுவினர் காணவில்லை.

நச்சுத்தன்மை வாய்ந்த எரிவாயு மற்றும் குழம்பு போன்ற திரவப் பாறை சூறாவளி வேகத்தில் எரிமலை சரவில் இருந்து ஆயிரக்கணக்கானோரைக் கொன்றபடி உருண்டு வந்தது. அதனால் மவுண்ட் தம்போராவின் உயரம் 4,000 (1,220 மீட்டர்) அடி சுருங்கியது.

அப்போது ஆண்டு 1815. பரந்து விரிந்த எரிமலை சாம்பல், மேகத்தில் வடக்கு அரைக்கோளத்தின் குறுக்கே படர்ந்து சூரியனை மறைத்தது.

ஐரோப்பாவில், "1816" கோடை இல்லாத ஆண்டானது. பயிர்கள் பொய்த்தன. விரக்தியில் மக்கள் எலிகள், பூனைகள், புல்லை உண்டனர்.

ஜெர்மனின் டார்ம்ஷ்டட் நகரில், இந்த பாதிப்பு, 13 வயது சிறுவனிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜஸ்டஸ் வொன் லீபிக் தனது தந்தையின் பட்டறையில் ரசாயன நிறங்கள், பெயிண்ட், பாலிஷ் தயாரிப்புக்கு உதவினார்.

கடுமையான ஆய்வு

லீபிக் மிகத் திறமையான வேதியியலாளராக வளர்ந்தார். பசியை தடுக்க உதவ வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்றும் நோக்குடன் அவர் பணியாற்றினார்.

உரங்களுக்காக தமது ஆரம்பகால ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார்.

ஊட்டச்சத்து அறிவியல் மற்றும் பன்றிச் சாறு கண்டுபிடிப்பில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

அவர் மற்றவையும் கண்டுபிடித்தார் : அதுதான் குழந்தைகள் ஃபார்முலா.

1865-ஆம் ஆண்டில் பசும்பால், கோதுமை மாவு, மால்ட் மாவு மற்றும் பொட்டாசியம் பைகார்பனேட் ஆகியவை உள்ளடக்கிய குழந்தைகளுக்கான கரையக் கூடிய உணவுப் பவுடரை லீபிக் கண்டுபிடித்தார்.

கடுமையான அறிவியல் ஆய்வின் மூலம் தாய்ப்பாலுக்கு மாற்றாக வெளிவந்த முதலாவது வர்த்தக தயாரிப்பாக அது விளங்கியது.

ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் அளிக்கக் கூடிய தாய் அமைவதில்லை என்பது லைபிக்குக்கு தெரியும்.

அதுபோல, ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் கிடைப்பதில்லை. நவீன மருத்துவத்துக்கு முன்பாக, 100 குழந்தைகளில் ஒரு குழந்தையின் தாய் உயிரிழந்தார். ஏழை நாடுகளில் இன்றளவில் வறிய நாடுகளில் அதில் சற்றே முன்னேற்றம் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இளமையில் அனுபவித்த பசியின் கொடுமையால் ஜஸ்டஸ் வான் வியேபிக் தூண்டப்பட்டார்

சில தாய்மார்களால் போதுமான அளவுக்கு பால் கொடுக்க முடிவதில்லை. இந்த எண்ணிக்கை வாதத்துக்குரியது என்றாலும் 20 பேரில் ஒரு தாய்க்கு என்ற அளவில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

ஃபார்முலாவுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது?

ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள பெற்றோர் "தாய்ப் பால்" அளிக்க ஒருவரை நியமித்தனர் - பணிக்குச் செல்லும் பெண்ணுக்கு அது மதிக்கத்தக்க தொழிலாகவும் லீபிக் கண்டுபிடிப்புக்கு அது ஆரம்பகால பாதிப்பாகவும் இருந்தது. சிலர் ஆடு அல்லது கழுதையை பயன்படுத்தினர்.

சரியான நேரம்

பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு பாக்டீரியாக்களில் இருந்து சுத்தப்படுத்தப்பட்ட மெதுமான உணவு, ரொட்டி, நீர்க்காளான் போன்றவற்றை வழங்குவர்.

1800 ஆண்டுகளின் தொடக்கத்தில், உயிர் பலிகள் அதிகமானதில் வியப்பொன்றும் இல்லை. தாய்ப்பால் கிடைக்காத மூன்றில் இரண்டு குழந்தைகள் தங்களின் முதலாவது பிறந்த நாளைப் பார்க்க உயிருடன் இருந்ததில்லை.

அத்தகைய பதற்றம் நிறைந்த நேரத்தில் லைபிக்கின் ஃபார்முலா, சந்தையில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Alamy

கிருமியின் கோட்பாடும், பால்புட்டி ரப்பர்களும் அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால், தாய்ப்பால் கொடுக்க முடியாத பெண்களைக் கடந்து லைபிக் ஃபார்முலா வேகமாக பரவியது.

லைபிக்கின் குழந்தைகளுக்கான கரையும் தன்மை வாய்ந்த பவுடர் கண்டுபிடிப்பு, வாழ்வில் செழுமையாக இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, அது வாழ்க்கைத்தேர்வின் விருப்பமாகியது.

நவீன பணிச் சூழலை வடிவமைக்கும் விருப்பமாக அது மாறியது. பல புதிய தாய்மார்களுக்கு அவர்களின் தேவைக்காகவோ அவசியத்துக்காவோ, திரும்பவும் பணிக்குத் திரும்புவதற்காக லைபீக்கின் ஃபார்முலா கடவுளின் கடைசி வாய்ப்பு போல கருதப்பட்டது.

மேலும், பால் கொடுப்பதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்வது தங்களின் பணியை பாதிக்கலாம் என்று பெண்கள் சரியாகவே வேதனைப்பட்டனர்.

வருவாய் இடைவெளி

சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து விட்டு ஆலோசனை, உயர் நிதித் துறைகளில் சக்தி மிக்கவர்களாகத் திகழும் ஆண், பெண்களின் அனுபவங்களை பொருளாதார வல்லுநர்கள் அண்மையில் ஆய்வு செய்தனர்.

முதலில் ஆண்களுக்கு இருப்பது போன்ற அனுபவங்கள் பெண்களுக்கு இருப்பதாக தெரிய வந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே பெரிய அளவில் வருவாய் ஈட்டுவதில் இடைவெளி உருவானது.

முக்கியமான தருணமாக தாய்மை அடையும் காலத்தில் பெண்கள் பணியில் இருந்து விலகியிருப்பதும் அந்த காலத்தில் அவர்களை பணியமர்த்தியவர்கள் குறைவாக ஊதியம் தந்ததும் தெரிய வந்தது.

முரண்பாடாக, பெண்களை போலவே ஆண்களுக்கும் குழந்தைகள் உள்ளது. ஆனால், அவர்கள் தங்கள் பணி முறையை மாற்றிக் கொள்வதில்லை.

பட மூலாதாரம், David Ramos/Getty Images

படக்குறிப்பு,

தந்தைவழி விடுப்பு எடுத்து கொள்ளும் சில உயர் தலைமை நிர்வாகிகள் மார்க் ஜுக்கர்பெர்க் ஒருவராவார்

குடும்பத்தை தொடங்கும் வேளையில் ஆண்களை போல பெண்கள், நேரம் எடுத்துக் கொள்வதற்கு உயிரியல், கலாசார காரணங்கள் உள்ளன.

கர்ப்பப்பை என்பது பெண்களிடம் மட்டும் தான் இருக்கும் என்ற நிலையை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், பணிச்சூழல் கலாசாரத்தை மாற்ற நாம் முயற்சிக்கலாம்.

தந்தைகளுக்கு குழந்தை வளர்ப்பில் சட்டப்பூர்வ உரிமை வழங்கும் வகையில் பணி விடுப்பு வழங்கும் ஸ்கேன்டினேவியாவை முன்னோடியாகக் கொண்டு பல்வேறு அரசுகளும் செயல்படுகின்றன. ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற பல நிறுவனங்களின் தலைவர்கள் இதற்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

"ஃபார்முலா பால்" பணிக்கு தாய் திரும்பும்போது, அவரது பொறுப்பை தந்தை ஏற்பதை எளிமையாக்குகிறது.

சிலருக்கு மட்டுமே தாய்ப்பால் சுரக்கும் பம்ப் முறை ஃபார்முலாவை விட மேலான முயற்சியாக உள்ளது.

பணியில் இருந்து விலகியிருக்க முடியாத தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தை குறைவாகக் கொண்டவர்களாக இருப்பர். அது ஆச்சரியம் அளிக்கக் கூடிய விஷயம்தான். எல்லாவற்றுக்கும் ஒரு விஷயம்தான் பிரச்னை.

தாய்ப்பாலுக்கு நிகரான சாதகமான செய்முறையை மேம்படுத்தக் கூடிய பரிணாமம், ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்குப் பின்பே வந்துள்ளது.

குறிப்பாக சுத்தமான தண்ணீரும் தூய்மைமிகு கருவிகளும் எப்போதுமே கிடைக்காத நிலை உள்ள வளர்ந்து வரும் உலகில், ஃபார்முலா பால் திட்டம் தாய்ப்பாலுக்கு நிகரான நிலையை எட்ட முடியாது இருக்கலாம்.

2016-ஆம் ஆண்டில் லேன்செட் என்ற மருத்துவ இதழில் வெளியான தொடர்ச்சியான கட்டுரைகளில் இந்த பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தாய் பாலூட்டுவதன் மூலம் ஓராண்டு 8 லட்சம் குழந்தைகளின் இறப்பை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்

ஃபார்முலா பால் பவுடர் கொடுக்கப்பட்ட குழந்தைகள், தாய்ப்பால் அருந்திய குழந்தைகளை விட அதிகமாக சுகவீனம் அடைவதும், அக்குழந்தைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகமாவதும், அவற்றை பார்த்துக் கொள்ள பெற்றோர் அதிக நேரம் செலவிடுவதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எல்லாவித வயிற்றுப்போக்கு பிரச்னைகள் மற்றும் எல்லாவித சுவாச நோய் தொற்றுகளில் பாதியை தாய்ப்பால் கொடுப்பதால் தடுத்து விட முடியும் என்று ஒரு கருதப்படுகிறது.

ஃபார்முலா பால் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படலாம் எனவும் கருதப்படுகிறது.

"லேன்செட்" இதழில் வெளியான 1,300 ஆய்வுக் கட்டுரைகளிபடி, தாய்ப்பால் மூலம் ஆண்டுக்கு சுமார் 800,000 குழந்தைகள் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

ஜஸ்டஸ் வொன் லைபிக் உயிர்களைக் காக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவர் திகிலுடன் இருந்திருக்கலாம்.

பொருளாதார செலவினம்

பணக்கார நாடுகளிலும் கூட, அசுத்தம் நிறைந்த பால் மற்றும் தண்ணீர் கவலைக்குரிய விஷயம்தான்.

ஆனால், ஃபார்முலாவால், குறைந்த அளவிலான பொருளாதார செலினமே ஏற்படும்.

மேலும், லேன்செட் ஆய்வுக் கட்டுரையில், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் புத்திக் கூர்மை சற்றே அதிகமாக வளருவதற்கான ஆதாரம் உள்ளதாகக் கூறுகிறது. உங்களால் பிற விஷயங்ளில் முடிந்தவரை கட்டுப்பாட்டுடன் இருக்கும்வரை மூன்று விஷயங்களில் இது சாத்தியமாகிறது.

எது செய்தால் அந்த ஒட்டுமொத்த குழந்தை தலைமுறையும் சற்றே அதிக புத்தி சாதுர்யத்துடன் இருக்கும்?

குளோபல் ஃபார்முலா சந்தையில் இதை செயல்படுத்த வேண்டுமானால், உலக அளவில் ஆண்டுக்கு 300 பில்லியன் டாலர் (232 பில்லியன் பவுண்ட்) செலவாகும் என்று லேன்செட் ஆய்வுக் கட்டுரையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாகவே, பல அரசுகள் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்க முயற்சிக்கின்றன. ஆனால், அதன் மூலம் யாரும் உடனடியாக பாலம் சம்பாதிக்க முடியாது. மறுபுறம் ஃபார்முலா விற்பனை லாபகரமாகலாம்.

அண்மைக்காலத்தில் எதை அதிகமாக நீங்கள் பார்த்தீர்கள்? தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான பொது சேவை அறிவிப்புகளையா அல்லது ஃபார்முலா விளம்பரங்களையா?

தாய்ப்பால் கொடுப்பதை ஒருவர் நிறுத்தி விடுவதால் அவருக்கு பால் சுரப்பது நின்று போகும் என்பதால் அல்ல, மீண்டும் அந்த நிலைக்கு செல்ல முடியாது என்பதால் விளம்பரங்கள் எப்போதுமே சர்ச்சைக்குரியவையாக இருந்துள்ளன.

குழந்தைகளுக்கான கரையும் பால் பவுடர் தயாரிப்பு தாய்ப்பாலை விட சிறந்தது என எப்போதும் லீபிக் உரிமை கொண்டாடியதில்லை. இயன்ற அளவுக்கு ஊட்டச்சத்து மிக்கதாக தனது தயாரிப்பை உருவாக்க முடியும் என்றே அவர் கூறி வந்தார்.

நெஸ்லே சர்ச்சை

ஆனால், குற்றமில்லாத நோக்கத்துடன் தம்மை எள்ளி நகையாடுவோரை அவர் விரைவாக ஈர்ப்பார். 1890 ஆண்டுகளில் திரவ பால் பவுடர்கள் தருவது சிறந்த கலையாக ஃபார்முலா விளம்பரங்கள் உருவகப்படுத்தின.

பட மூலாதாரம், Alamy

இதற்கிடையே, விளம்பரங்களால் கவரப்பட்ட மகப்பேறுக்கு பிந்தைய தாய்மார்கள் வைட்டமின் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதை குழந்தைப்பேறு மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

1974-ஆம் ஆண்டில் "தி பேபி கில்லர்" என்ற பெயரில் தேவைக்கான போர் என்ற பெயரில் ஒரு துண்டுப் பிரசுரத்தை ஒரு பிரசாரக் குழு வெளியிட்டது.

ஆப்பிரிக்காவில் "நெஸ்லே" குழந்தை பால் பவுடர் விற்கப்பட்டது பற்றியும் அது ஏற்படுத்திய பாதிப்புகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதனால் பல ஆண்டுகளுக்கு நெஸ்லே தயாரிப்பு புறக்கணிக்கப்பட்டது.

1981-ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யுஎச்ஓ) தாய்ப்பாலுக்கு மாற்றான விற்பனை தொடர்பான சர்வதேச விதி வகுக்கப்பட்டது.

ஆனால், தமது விற்பனை விதியை தாமாகவே வகுத்துக் கொள்வதாக நெஸ்லே கூறி அத்தகைய அறிவிப்பை வெளியிடும் முதலாவது தயாரிப்பாளராக நெஸ்லே விளங்கியது.

ஆனால், உலக சுதாதார நிறுவனத்தின் விதி மிகவும் கடுமையான சட்டம் கிடையாது. அதன் விதிகள் பரவலாக கடைப்பிடிக்கப்படுவதாக பல்வேறு பிரசாரகர்கள் வாதிடுகின்றனர்.

விநியோக சங்கிலி

உலகிலேயே மிகச் சிறந்த ஒன்றை வாங்க வழி இருந்தால் எப்படி இருக்கும்? தாய் மற்றும் தந்தைக்கு அவர்களின் பணிக்காலத்தில் சமசான இடைவெளி அமைவது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் சுரக்கும் பம்புகள் அல்லது செயற்கை பவுடர்களின்றி தாய்ப்பால் கிடைப்பது என அமைந்தால் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தாய் பாலை உறைய வைத்துவிட்டு பின்னர் வேறு நாளில் பயன்படுத்தி கொள்ளலாம்

சந்தை சக்திகளை அவற்றின் தர்க்க ரீதியிலான முடிவுகளுக்கு உள்படுத்தாமல் நீங்கள் முடிவெடுத்தால் அது நடக்கலாம்.

உட்டாவில் அம்ப்ரோஸியா லேப்ஸ் என்ற ஒரு நிறுவனம் உள்ளது. அதன் தொழில் உத்தி தெரியுமா? உலகம் முழுவதும் உள்ள தாய்மார்களிடம் தாய்ப்பால் வழங்க பணம் தருவது, அவற்றை சோதனைக்கு உள்படுத்துவது, பின்னர் அதை அமெரிக்க தாய்மார்களுக்கு வழங்குவதுதான் அந்நிறுவனத்தின் பணி.

அந்த பாலின் விலை மிகவும் அதிகம், லிட்டருக்கு சுமார் 100 டாலர்கள் (77 பவுண்டுகள்). இந்த விலை மேலும் சரிவடையலாம். ஃபார்முலா பாலுக்கு வரி விதிக்கப்படலாம். தாய்ப்பாலுக்கு சந்தையில் மானியமும் வழங்கப்படலாம்.

இந்த யோசனை எல்லோருக்கும் பிடிக்காது. இருப்பினும், அம்ப்ரோஸியா செயல்படும் கம்போடியாவின் அரசு கூட தாய்ப்பால் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

தாய்ப்பால் கொடுப்பதை தொழிலாக செய்யும் முறைக்கு ஜஸ்டஸ் வொன் லீபிக் கண்டுடிப்பு சாவு மணி அடித்த்து. 150 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகளாவிய விநியோகச் சங்கிலி முறை, அதை மீண்டும் கொண்டு வர வழியமைத்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :