ஜெருசலேம் புனித தலத்தில் நிறுவப்பட்ட மெட்டல் டிடெக்டர்களை அகற்றியது இஸ்ரேல்
கிழக்கு ஜெருசலேத்தில் உள்ள ஒரு புனித தலத்தின் வெளியே நிறுவப்பட்டிருந்த உலோகங்களை கண்டறியும் மெட்டல் டிடெக்டர்களை இஸ்ரேல் அகற்றியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
அண்மையில் இந்த மெட்டல் டிடெக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து இவற்றை அகற்றும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த மெட்டல் டிடெக்டர்களுக்கு பதிலாக குறைந்தளவு கண்காணிப்பு ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வாக்களித்தது.
இந்நடவடிக்கை பாலத்தீனியர்களை கோப மூட்டியுள்ள நிலையில், புனிதத்தலத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக இந்த பகுதியையோட்டிய பதற்றம் அதிகரித்து இருந்தது.
முஸ்லீம்களுக்கு ஹராம் அல்-ஷரீஃப் என்றும், யூதர்களுக்கு டெம்பிள் மவுண்ட் என்றும் இந்த புனித தலம் அறியப்படுகிறது.
வெள்ளியன்று, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு நதிக்கரையில் உள்ள ரமல்லாவில் உள்ள ஓர் குடியேற்ற பகுதியில் இஸ்ரேலிய பொதுமக்களில் மூன்று பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்