வறட்சி எதிரொலி: வத்திக்கானின் செயற்கை நீரூற்றுகளை நிறுத்தினார் போப்

போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், Franco Origlia/Getty Image

இத்தாலியின் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் வத்திக்கான் தன்னுடைய பிரபல செயற்கை நீரூற்றுக்களில் நீர்வரத்தை நிறுத்த தொடங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் தொடர்பான போப் பிரான்சிஸின் போதனைகளுக்கு ஒத்ததாக அமைகிறது என்று வத்திக்கான் வானொலி தெரிவித்திருக்கிறது.

சுற்றுச்சூழலால் உருவாகக்கூடிய தன்னுடைய அச்சங்களை 2015-ஆம் ஆண்டு வெளியிட்ட திருமுகத்தில் போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியின் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களை பாதித்துள்ள தற்போதைய வறட்சி, இத்தாலிய விவசாயத்தில் 2 பில்லியன் யூரோ (2.3 பில்லியன் டாலர், 1.8 பில்லியன் பவுண்ட்) மதிப்பிலான இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

பட மூலாதாரம், EPA

தலைசிறந்த பரோக் கட்டடக்கலை வடிவத்தோடு 2 நீரூற்றுகள் உள்பட மொத்தம் சுமார் 100 செயற்கை நீரூற்றுக்கள் வத்திக்கானில் கட்டப்பட்டுள்ளன. தோட்டத்தில் உள்ளவை உள்பட அனைத்து செயற்கை நீரூற்றுக்களும் நிறுத்தப்படவுள்ளன.

வத்திகானிலுள்ள அனைத்து செயற்கை நீரூற்றுக்களும் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை என்று வத்திக்கான் செய்தி தொடர்பாளர் கிரெக் புர்கெ தெரிவித்திருக்கிறார்.

இந்த வறட்சி நெருக்கடியின்போது, இத்தாலி மக்களோடு ஒன்றித்திருப்பதை வத்திக்கான் காட்டும் வழிமுறை இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சுற்றுச்சூழல் பற்றி போப் பிரான்சிஸ் கொண்டுள்ள கருத்தோடு இந்த முடிவு மிகவும் ஒன்றிபோகிறது. நாம் வளங்களை வீணாக்கக்கூடாது. சிலவேளைகளில் தியாகம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Franco Origlia/Getty Image

"இதற்கு முன்னால் கேள்விப்படாத அளவுக்கு வீணாக்கும் பழக்கமும், பொருட்களை தூக்கி வீசுவதும் நடைபெறுவதை போப் எழுதியுள்ள திருமுகம் நினைவூட்டுகிறது. அதேவேளையில் மனித வாழ்க்கைக்கும், இன்றியமையாததாக நிலத்திலும், கடலிலும் சுற்றுச்சூழலுக்கும் ஆதரவாக இருப்பதால், சுத்தமான நீர் முதன்மை முக்கியத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது"

இந்த ஆண்டு வசந்தகாலம் கடந்த 60 ஆண்டுகளில் இத்தாலியின் 3வது மிகவும் வறட்சியான காலமாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோம் நகரம் சராசரிக்கும் குறைவான மழைபொழிவையே பெற்றிருக்கிறது. இந்த வாரத்தின் இறுதியில் கடும் நீர் கட்டுப்பாடு வழிமுறைகளை அறிமுகப்படுத்த நகர ஆட்சியாளர்கள் முடிவு செய்யவுள்ளனர்.

ரோமின் மிகவும் புகழ்பெற்ற செயற்கை நீரூற்றுகள் சில ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளன.

இத்தாலியின் வறட்சி

பட மூலாதாரம், Reuters

  • 60 சதவீத விவசாய நிலம் விளைவிக்க முடியாத ஆபத்து
  • 10 பிராந்தியங்கள் தேசிய பேரழிவு நிதியுதவிகளை தயாரிக்கின்றன.
  • விவசாய துறையில் 2 பில்லியன் யூரோ இழப்பு என மதிப்பீடு
  • பால் பண்ணையாளர்கள், திராட்சை மது மற்றும் ஆலீவ் தாயாரிப்பு மிக மோசமாக பாதிப்பு
  • தலைநகரான ரோமில் நீர் குறைவாக கிடைக்கும் நிலை
  • நகரின் குடிநீரூற்றுகள் சில வற்றிபோயுள்ளன.

இந்த வறட்சி, இத்தாலியின் பிற பல பகுதிகளை பாதிப்படைய செய்துள்ளது.

இரண்டு வடக்கு மாகாணங்களில் முன்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் தெற்கு பகுதியில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடி வருவதால், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பால் பண்ணையாளர்களும், ஆலீவ், தக்காளி மற்றும் திராட்சை பயிரிட்டுள்ளோரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோரில் அடங்குவதாக கோல்டிரெட்டி கூட்டமைப்பு எச்சரித்திருக்கிறது.

விளைச்சல் குறைவாக இருப்பதால், விலைவாசி உயரலாம் என்று அச்சம் நிலவுகிறது.

அதிக வெப்பத்தால் பசுக்கள் துன்புறுவதால், பல பகுதிகளிலுள்ள பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தது 10 இத்தாலிய பிரதேசங்களை தேசிய பேரிடர் பிரதேசங்களாக அறிவிக்க விவசாய அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுப்பதற்கு தங்களை தயார் செய்து வருகின்றன என்று இத்தாலியின் அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி

காணொளிக் குறிப்பு,

குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :