ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்கு

ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்கு

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான அதிபர் டிரம்பின் நம்பிக்கையை இந்த சட்டம் சிக்கலாக்கலாம் என கருதப்படுகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான ஒரு சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்பதற்கு ஆதரவாக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில் அதற்கு பதிலடி நடவடிக்கையாக மூத்த அதிகாரிகள் குறிவைக்கப்படுவார்கள்.

ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்துவதற்கான அதிபர் டிரம்பின் நம்பிக்கையை இந்த சட்டம் சிக்கலாக்கலாம் என கருதப்படுகிறது.

தற்போது இந்த சட்டம் அதிபரால் கையெழுத்திடப்படுவதற்குமுன் செனட் சபையின் ஒப்புதலை பெறவேண்டும்.

இந்த சட்டத்தை மீளாய்வு செய்து வருவதாகவும், அதிபர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவாரா என்பது குறித்து தெளிவற்ற நிலை இருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

''வடகொரியா, இரான் மற்றும் ரஷ்யா மீது கடும் தடைகளை விதிக்க அதிபர் ஆதரித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் சட்டம் குறித்த மீளாய்வு பணியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டுள்ளது.மேலும், அதிபரின் அலுவலகம் இறுதி சட்ட வரைவு ஒன்றிற்காக காத்திருக்கிறது.'' என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவியதாக குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், அதிபர் டிரம்ப் உடனான ரஷ்யாவின் தொடர்பு அவர் பதவியேற்ற முதல் ஆறு மாதங்களில் கடுமையான நிலைத்தன்மையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :