''தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை கார்டினல் பெல் ஒப்புக்கொள்ள மாட்டார்'': பெல் வழக்கறிஞர்

கார்டினல் ஜார்ஜ் பெல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கார்டினல் ஜார்ஜ் பெல்

கார்டினல் ஜார்ஜ் பெல் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று மெல்போர்ன் நீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, சுருக்கமான நிர்வாக விசாரணைக்காக வத்திக்கானின் பொருளாளரான 76 வயதுடைய கார்டினல் ஜார்ஜ் பெல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கார்டினல் பெல் மீது பல பாலியல் புகார்கள் உள்பட தொடர்ச்சியான பல பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று கடந்த மாதம் போலீஸார் கூறியிருந்தனர்.

ஆனால், கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியரான பெல், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார்.

சுமார் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அவர் வேண்டுகோள் ஒன்று விடுத்ததற்கான அவசியம் ஏற்படவில்லை.

''கார்டினல் பெல் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். தான் குற்றமற்றவர் என்பதை அவர் ஏற்கனவே கருதிவந்த நிலையில் அதையே கடைபிடிப்பார் '' என்று அவருடைய வழக்கறிஞர் ராபர்ட் ரிச்சர் மெல்பர்ன் குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

செப்டம்பர் 8-ஆம் தேதிக்குள் சுருக்கமான ஆதாரங்களை தயார் செய்யும்படி வழக்கறிஞர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட செயல்முறையில் முக்கிய அங்கமாக கருதப்படும் ஒரு விசாரணை அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :