கிட்கேட் சாக்லெட் மோகம்: ஜப்பானில் நெஸ்லே தொழிற்சாலை தொடக்கம்
ஜப்பானில், வெளிநாட்டு சுவைகள் கொண்ட கிட்கேட் சாக்லெட்டிற்கு ஏற்பட்டுள்ள தேவையால் 25 வருடங்களில் முதல்முறையாக நெஸ்லே நிறுவனம் அங்கு தொழிற்சாலையை திறக்கவுள்ளது.

கிட்கேட் பொதுவாக பால், சாக்லெட் மற்றும் பல சுவைகளில் செய்யப்படும்; ஆசியாவில் டஜன் கணக்கான கிட்கேட்கள் பிரபலமாக உள்ளது.
வாசாபி மற்றும் கிரீன் டீ சுவைகளிலான கிட்காட், 2010ம் ஆண்டிலிருந்து ஜப்பானில் கிட்கேட்டின் விற்பனை 50 சதவீத அளவு அதிகரிக்க உதவியது என நெஸ்லே தெரிவித்துள்ளது.
இந்த தொழிற்சாலை சுற்றுலா பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்ற விலை உயர்ந்த சுவையை தயாரிப்பதில் கவனம் செலுத்தும்.
கடந்த நான்கு வருடங்களில் சாக்லெட்டிற்காக சுற்றுலாப் பயணிகள் செலவிடுவது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது; அது அரசாங்க தகவல்படி 1.2 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
ஜப்பானில் சவாலான சூழலிலும், கடந்த சில வருடங்களாக நெஸ்லே நல்ல வரவேற்பை பெற்று வருவதாக நெஸ்லேவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
புதுமை மற்றும் தனித்துவத்தில் செலுத்திய மூலோபாய கவனத்தால் இம்மாதிரியான நல்விளைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர். அதற்கு எடுத்துக்காட்டாக கிட்கேட்டை குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்