புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் ஆணை

  • 26 ஜூலை 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் இருந்து, இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பினை நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

2009-ஆம் ஆண்டு விடுதலை புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சமர்பிக்கவில்லை என்றும் ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மற்றோரு தீர்ப்பில், இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்தீன அமைப்பின் கோரிக்கையினை நீதிமன்றம் நிராகரித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்