ஜெருசலேம்: போராட்டத்தை கைவிட்டு வழிபாட்டுத்தலத்துக்கு திரும்பினர் பாலத்தீனியர்கள்

பதற்றத்திற்கு வழிவகுத்த, பாதுகாப்பு நடவடிக்கைகளின் கடைசி பகுதியையும் இஸ்ரேல் நீக்கியதையடுத்து, கிழக்கு ஜெருசலத்தில் ஒரு முக்கிய புனித தலத்தை புறக்கணிப்பதாக எடுக்கப்பட்ட முடிவை முஸ்லிம் தலைவர்கள் திரும்பபெற்றனர்.

வழிபாட்டுத்தலத்துக்கு திரும்பினர் பாலத்தீனிர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வழிபாட்டுத்தலத்துக்கு திரும்பினர் பாலத்தீனிர்கள்

இதையடுத்து, பாலத்தீனியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, ஜெருசலெத்தில் அமைந்துள்ள புனித்தலமான டெம்பிள் மவுண்ட்டிற்கு சென்று வழிபாடு செய்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன் இந்த நெருக்கடி தொடங்கிய பிறகு முதல்முறையாக வியாழனன்று காலை அந்த வளாகத்திற்கு பாலத்தீனியர்கள் மீண்டும் நுழைய வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் வலியுறுத்தினர்

இஸ்ரேலால் சமீபமாக நிறுவப்பட்ட பாதுகாப்பு கருவிகளின் எஞ்சிய பாகங்களை வியாழன் காலை எடுத்துச் செல்லப்பட்டது.

பாலத்தீனியர்கள் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்தனர; இரண்டு இஸ்ரேல் போலிஸ் அதிகாரிகள் இதில் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், REUTERS

பழைய நகரத்தில், முஸ்லிம்களால் `ஹரம் அல் ஷரிஃப்` என்றும் யூதர்களால் `டெம்பிள் மவுண்ட்` என்றும் அழைக்கப்படும் அந்த சர்ச்சை மிகுந்த பகுதியில் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதாக கருதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாலத்தீனியர்கள் அங்கு நுழையவதை தவிர்த்தனர்.

இஸ்ரேல் இந்த புதிய நடவடிக்கைகளை ரத்து செய்யும் வரை இஸ்ரேலுடனான தொடர்புகளை துண்டிப்பதாக பாலத்தீனியத்தின் அதிகார அதிபர் முகமத் அப்பாஸ் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியை தீர்க்க தீவிர ராஜரீக முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் அமெரிக்கா மற்றும் ஜோர்டானும் ஈடுபட்டன. அந்த புனித தலம் ஜோர்டானின் கட்டுப்பாட்டில் உள்ளது மேலும் அங்கு அதிகளவில் பாலத்தீனியர்கள் வசிக்கின்றனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவதுமாக களைப்பது குறித்து இஸ்ரேல் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

1967ஆம் ஆண்டு மத்திய கிழக்கு போரில் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் கைப்பற்றியது; பாலத்தீனத்துடனான சர்ச்சையில் மிக முக்கிய சர்ச்சைக்குரிய பகுதியாக அது உள்ளது.

ஜெருசலத்தின் மொத்த ஆட்சி உரிமையையும் இஸ்ரேல் கோருகிறது ஆனால் அது சர்வதேச நாடுகளால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக அறிவிக்க விரும்புகிறது.

வியாழன்று டெம்பிள் மவுண்ட் அல்லது ஹரம் அல் ஷரிஃபிற்கு அருகில் உள்ள லயன்ஸ் கேட் வாயிலில் பாதுகாப்பு வேலிகளும் தடுப்புகளும் அகற்றப்பட்டதையடுத்து பாலத்தீனியர்கள் பாட்டு பாடி, நடனமாடி மற்றும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

பழைய நகர சுவர்களுக்கு வெளியேவும் அதற்கு அருகிலும் கூட்டு பிரார்தனைகள் நடத்தப்பட்டன. அந்த தலத்திற்கு அருகில் போலிஸார் கொல்லப்பட்டதையடுத்து மெடல் சோதனை கருவிகள் நிறுவியதிலிருந்து தினசரி இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன.

ஆனால் ஜெருசலேமின் பழைய நகரில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும், பாலத்தீனியர்களுக்கும் புதிதாக மோதல்கள் வெடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய தரப்பு கண்ணீர்ப்புகை மற்றும் கையெறி குண்டுகள் கொண்டு தாக்கியதாக தகவல்கள் வந்துள்ளன.

நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக பாலத்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :