வெனிசுவேலா நெருக்கடி: இறுதி கட்டம் நெருங்குகிறதா?

வெனிசுவேலாவின் அரசியல் சட்டத்தை மாற்றும் அரசின் முடிவுக்கு எதிரான வேலை நிறுத்தம் இன்று இரண்டாவது நாளை எட்டியிருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. உயிர்பலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதிபர் மடுரோவோ பிடிவாதமாக இருக்கிறார்.

தனது நெருங்கிய உயரதிகாரிகள் பதிமூன்று பேருக்கு எதிராக அமெரிக்க அரசு அறிவித்த புதிய தடைகளை அவர் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

நான்கு மாதங்களாக நீடிக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இதுவரை நூற்றி ஐந்துபேர் பலியாகியிருக்கிறார்கள்.

நாட்டின் அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் ஞாயிறன்று நடக்கவுள்ள நிலையில் இந்த மோதல்கள் மேலும் மோசமடையலாம் என்னும் அச்சம் அதிகரித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :