காணாமல் போன அமெரிக்க பெண் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி தெரியுமா?

  • 29 ஜூலை 2017

நினைவாற்றல் இழப்பு (டிமென்சியா) ஏற்பட்டிருந்த அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் காணாமல் போன சில நிமிடங்களில் காவல்துறையின் மோப்ப நாயால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை PA

அந்த பெண்ணின் உடல் வியர்வையை ரப்பர் ஒன்றில் தேய்த்து பாட்டிலில் பாதுகாப்பாக அடைத்து வைத்திருந்ததால்தான், மிக விரைவாக அவரை கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெயர் குறிப்பிடப்படாத இந்த பெண், தன்னுடைய வியர்வை பாதுகாக்க சிறப்பு கருவியை ஒன்றை பயன்படுத்தியிருப்பதாக சிட்ரூஸ் வட்டார ஷெரிஃபின் அலுவலகம் கூறியிருக்கிறது.

இந்த வியர்வை பாதுகாக்கும் சிறப்பு கருவி ஒரு நபரின் வியர்வை மணத்தை 7 ஆண்டுகள் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடியது.

இந்த பெண் தன்னுடைய வியர்வையை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்து, பாதுகாத்து வைத்திருந்ததை ஜனவரி 2015 என்று இந்த வியர்வை தேய்க்கப்பட்ட கருவிக்குள் எழுதப்பட்டிருந்ததை புகைப்படம் காட்டுவதாகவும் காவல்துறையினர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Citrus County Sheriff's Office

உடலின் மணங்களை பாதுகாக்கும் கருவிகளில் ஒரு நபரின் அக்கிளில் உரசப்படுகின்ற பட்டையை கொண்டிருக்கும். அதனை அக்கிள் வியர்வையில் உரசிய பின்னர், காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதினால், காணாமல் போன நபரை தேடுவதற்கு முன்னால், இந்த பாட்டிலில் உள்ள வியர்வை மணத்தை முகர்ந்து காவல்துறையின் மோப்ப நாய்கள் மிக எளிதாக கண்டுபிடிக்க வழிகோலும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு வியர்வை மணத்தை பாதுகாக்கும் கருவியை செய்வோர், காணாமல் போன நபரின் ஆடைகளை விட இந்த கருவி நன்றாகவும், விரைவாகவும் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கருவிகளில் வியர்வை மணத்தை பாதுகாப்பதால், பிற நபர்களின் மணங்களாலும் அல்லது வெளிப்புற சுற்றுச்சூழலாலும் கலந்து விடாமல் இருக்கசெய்கிறது.

படத்தின் காப்புரிமை Citrus County Sheriff's Office

மனிதர்களை விட நாய்களுக்கு மோப்ப சக்தி மிகவும் அதிகம். போதை பொருட்கள், மனிதர்கள், சில வேளைகளில் இறந்த உடல்கள் ஆகியவற்றை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க காவல்துறை மோப்ப நாய்களுக்கு பயற்சியளிக்கப்படுகிறது.

சீனா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் சில காவல்துறை பிரிவுகள், தங்களுடைய புலனாய்வுக்கு உதவும் வகையில், சந்தேக குற்றவாளிகளின் உடல் வியர்வை மாதிரியையும், குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்திலுள்ள மாதிரிகளையும் கேரித்து வைத்து கொள்கின்றன.

ஆனால், இதிலுள்ள அதிக தோல்வி விகிதம் பற்றிய கவலைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2006 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் போதை மருந்து கொண்டு செல்வதை தேடியபோது நான்கில் ஒரு பகுதியினரே கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை காணாமல்போன நபர் கண்டபிடிக்கப்பட்டாலும், கண்டுபிடித்த நாயை கொண்டாடும் விதமாக ஐஸ்க்ரீம் ஒன்று அதற்கு வழங்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :