குறுகிய நேரத்திற்கு உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர்

படத்தின் காப்புரிமை David McNew

அமேசான் இணையதளத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான ஜெஃப் பெஸொஸ் கடந்த வியாழக்கிழமையன்று மிகக் குறுகிய கால நேரத்திற்கு உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

அவருடைய சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது.

ஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீண்டும் தக்கவைத்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பில்கேட்ஸ் உடன் ஜெஃப் பெஸொஸ்

அமோசான் நிறுவனத்தின் சுமார் 17 சதவீத பங்குகளை பெஸோஸ் தன் வசம் வைத்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர்களாகும்.

வாஷிங்டன் போஸ்ட் என்ற நாளிதழை வாங்கியுள்ள பெஸோஸ், விண்வெளி ராக்கெட் தொழில் ஒன்றையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்