ரஷ்யா, வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு

ரஷ்யா, வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு

பட மூலாதாரம், Alex Wong

ரஷ்யா, இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மீது புதிய தடைகளை பிறப்பிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை 98-2 என்ற விகிதத்தில் ஆதரவாக வாக்களித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது.

இரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை அமல்படுத்த அதிபரின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.

ஆனால், அதிபர் டிரம்ப் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை பேண வேண்டும் என்று நினைக்கிறார். நாடுகளுக்கு எதிரான தடை சட்டத்திற்கு அரசியல் ஆதரவு உள்ள போதிலும் அதன் அமலாக்கத்தை தடுக்க அதிபரின் வீட்டோ அதிகாரத்தால் முடியும்.

பட மூலாதாரம், Getty Images

அதேசமயம், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை மூன்றில் இரண்டு பங்கு பிரநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் உறுப்பினர்களின் ஆதரவை கொண்டு ரத்து செய்ய முடியும்.

காரணம், ஒரு சில அரசியல்வாதிகளே இந்த தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதுதான்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு மட்டுமின்றி, 2014 ஆம் ஆண்டில் யுக்ரைனிடமிருந்து க்ரைமியா நாட்டோடு இணைத்ததற்கு தண்டிப்பதற்காகவும் இந்த தடை வரையறுக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :