'ஹீரோ' என்ற வாசகத்துடன்கூடிய டி-சர்ட் அணிந்தவர்கள் துருக்கியில் கைது
முன்பக்கத்தில் "ஹீரோ" என்று எழுதியிருந்த டி-சர்ட் அணிந்திருப்போரை தேடும் பணியில் துருக்கி பாதுகாப்பு படைபிரிவுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இந்த டி-சர்ட்அணிந்திருப்போர், தடைசெய்யப்பட்ட குலென் இயக்கத்தோடும், கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்போடும் தொடர்புடையவர்கள் என்று படையினர் கருதுகின்றனர்.
கடந்த 10 நாட்களில், "ஹீரோ" என்று எழுதப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்திருந்த சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக 'சிஎன்என்துருக்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்வு எழுத சென்ற சிலரும், பல்கலைக்கழக வளாகம் சென்ற பிறரும் என இந்த டி-சர்ட்டை அணிந்திருந்த ஒவ்வொருவரும் காவல்துறையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ள இந்த செய்தி நிறுவனம், கைதுகள் தொடர்கின்றன என்றும் கூறியுள்ளது.
முன்னதாக, ஜூலை மாதத்தில் கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னார் சிப்பாயான கோக்ஹான் குச்லு என்பவர் இதே டி-சர்ட்டை அணிந்து கொண்டு நீதிமன்ற விசாரணையில் தோன்றிய பின்னர் இந்த கைதுகள் தொடங்கின.
பட மூலாதாரம், Getty Images
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னால், ஃபெதுல்லா குலென் மற்றும் அவருடைய இஸ்லாமியவாத குலென் இயக்கமும் இருந்ததாக துருக்கி அரசு குற்றுஞ்சாட்டியுள்ளது.
இந்த குழுவானது இப்போது துருக்கியில் தீவிரவாத அமைப்பென கருதப்படுகிறது. முன் பகுதியில் "ஹீரோ" என்று எழுதியிருக்கும் டி-சர்ட் குலென் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு ஆதரவாளர்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
ஜனநாயக வழியில் சர்வாதியாகிறாரா துருக்கி அதிபர்?
ஜனநாயக வழியில் சர்வாதியாகிறாரா துருக்கி அதிபர்?
துருக்கியில் "ஹீரோ" என்கிற ஆங்கில சொல் "அன்புக்குரிய குரு ஆசீர்வதிக்கட்டும்" என்பதன் சுருக்கமாகவம் இருக்கலாம் என்று அரசு ஆதரவு 'சபாஹ்' செய்தித்தாள் பரிந்துரைக்கிறது. இதிலுள்ள 'குரு' என்ற சொல் ஃபெத்துல்லா குலெனை குறிக்கிறது. இத்தகைய அடையாளங்களை குலென் ஆதரவாளர்கள் தாங்கள் ஒன்றாக கூடியபோது பயன்படுத்தியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது,
என்னதான் காரணமாக இருந்தாலும், சர்ச்சைக்குரிய இந்த டிசார்ட் இப்போது விற்பனை செய்யப்படவில்லை. இந்த சர்ச்சை தொடங்கும் வரை ஒரு பிரபல ஆயத்த ஆடை கடைகள் பலவற்றை நடத்திவரும் நிறுவனம் ஒன்றால் 15 துருக்கி லிராவுக்கு (4.20 டாலர், 3.20 யூரோ) விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனம் இந்த டிசார்ட்டை தற்போது விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது என்று எதிர்கட்சியின் கும்குரியத் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்
- ‘பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சகோதரனே’ - அதிரவைக்கும் ஆணின் கதை
- 2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்
- வளர்ப்பு நாய்க்கு அதிபரின் பெயரை வைத்தவர் விடுவிப்பு
- “புலிகளுக்கு ஆதரவு என தமிழரின் கட்டடத்தை ராஜபக்ஷ பறித்தது செல்லாது”
- கறுப்பு பண குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்
- ''இலங்கையில் யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்