பண்டிகைக்காக தென் கொரியாவிலிருந்து 'மண்' இறக்குமதி - நியூஸிலாந்தில் சர்ச்சை

  • 30 ஜூலை 2017

இசை பண்டிகை ஒன்றுக்காக தென் கொரியாவில் இருந்து மண்ணை இறக்குமதி செய்ய வரி செலுத்தும் மக்களின் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழிக்கப்படுவதாக எதிர்பாராத சர்ச்சை ஒன்று திடீரென்று நியூஸிலாந்தில் ஏற்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரோடோரௌ நகரில் நடைபெறவுள்ள மட்டோபியா பண்டிகை ஏற்பாட்டாளர்கள் 5 டன் மண் தூளை தென் கொரியாவின் போர்பியோங்கில் இருந்து இறக்குமதி செய்ய 90 ஆயிரம் நியூஸிலாந்து டாலர்கள் (68 ஆயிரம் அமெரிக்க டாலர், 51 ஆயிரத்து 600 யூரோ) செலவு செய்துள்ளதாக ஸ்டஃப்.என்இஸட் (Stuff.nz) செய்தி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

நியூஸிலாந்தின் வடக்கில் இருக்கும் தீவு நகரமான ரோடோரௌவின் பேரவை இந்த செலவு பெரும் மதிப்புடைய பணம் என்று தெரிவித்திருக்கிறது.

அடுத்து வருகின்ற 5 மட்டோபியா நிகழ்வுகளுக்கு இந்த 5 டன் மண் தூள் போதுமானது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதம் நடைபெறும் மட்டோபியா நிகழ்வுகளில், மண்ணும், இசையும்

கலந்த, எதிர்பாராத, ஒழுங்கற்ற முறையில் நடைபெறும் உற்சாக கொண்டாட்டமாக இது இருக்கும்.

இந்த கொண்டாட்டத்திற்கு தேவையான மண்ணை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள நிதியானது, இந்த நிகழ்வின்போது வசூலிக்கப்படும் நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் திருப்பி செலுத்தப்படும்.

மிக சிறந்த மண் தூளை இறக்குமதி செய்ய ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்ய இன்னொரு நல்ல காரணம் உள்ளது என்று ரோடோரௌ நகரின் உள்ளூர் கவுன்சிலரான டிரிவோர் மேகஸ்வெல் 'த நியூஸிலாந்து ஹேரால்டு' ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

"ரோடோரௌ போதுமான மண் தூளை கொண்டுள்ளது என்ற பார்வை இங்கு உள்ளதை அறிவேன். ஆனால், தரையில் இருந்து பழைய மண்ணை எடுத்து யார் மீதும் எறிந்துவிட முடியாது. மக்களின் உடல் நத்திற்கு கேடு விளைவிக்கும் ஏதாவது பொருள் அதில் இருக்கக்கூடும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இருப்பினும், இறக்குமதி செய்யப்படும் மண் 15 சதவீத பகுதியைதான் கொண்டிருக்கும். உள்ளூர் குவாரியில் இருந்துதான் மீதி மண் பயன்படுத்தப்படும் என்று 'த நியூஸிலாந்து ஹேரால்டு' தெரிவித்திருக்கிறது.

தென் கொரிய வகை மண் "மட்டோபியா பார்வையாளர்களின் அனுபவத்திற்கு வித்தியாசமான வகை மண்ணாக இருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் இந்த முடிவு சமூக ஊடகங்களில் அதிக ஏளனத்தை பெற்றுள்ளது. இணையபயன்பாட்டாளர்கள் இந்த செலவையும், நாட்டின் மிகவும் கண்டிப்பான உயிரி பாதுகாப்பு கொள்கையில் சாத்தியமாகும் பாதிப்புக்களையும் விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

"எந்த அளவுக்கு திறமையான பேக்!... ஆடம்பர மண் கொள்முதல். தென் கொரியாவின் வங்கிக்கு போகும் வழிகள் எல்லாம் சிரிக்கின்றன" என்று ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் தெரிவித்திருக்கிறார்.

"இதை ஒரு நகைச்சுவையாக கருதுகிறேன். நம்முடைய காலணிகளில் அசுத்தத்தோடு பழக்க வழக்கங்களை நாம் கடைபிடிக்க முடியாது. ஆனால், அரசு மண்ணை இறக்குமதி செய்கிறது? என்று இன்னொருவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Matt Cardy/Getty Images

இந்த கவுன்சில் உள்ளூர் பிரச்சனைகளை முதலில் நிறைவேற்ற நினைத்திருக்கும் என்று பிறர் எண்ணியுள்ளனர். வீடில்லாதோருக்கு வீடு வழங்கும் வகையில் அவர்கள் மண் வீடுகளை கட்டித்தர போகிறார்களா? என்று ஒரு இணைய பயன்பாட்டாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மண் இறக்குமதி செய்ய ஆகும் செலவு "கற்பனைக்கு எட்டாதது" என்று நியூஸிலாந்து வரி செலுத்துவோர் ஒன்றியத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இது துபாய் பாலைவன பண்டிகைக்காக மணலை இறக்குமதி செய்வதுபோல உள்ளது என்று மேத்தியு ரோடஸ் கூறியிருக்கிறார்.

மண்ணில் இருந்து மில்லியன்களை உருவாக்குதல்

தென் கொரியாவிலுள்ள போர்பியோங்கில் இருந்து மண் தூள் நியூஸிலாந்துக்கு வழங்கப்படுகிறது. நியூஸிலாந்தின் மட்டோபியா ஏற்பாட்டர்களுக்கு இந்த மண் விற்கப்படுவது சிறந்த வர்த்தகமாக செழித்து வளர்கிறது.

போர்பியோங், அங்கு நடைபெறும் மிகவும் வெற்றிகரமான மண் பண்டிகையை, மண் குடிசைகளோடு, பல சுற்றுலா பயணிகளை வரவேற்கும் அளவுக்கு உயரிய சர்வதேச கோடைகால நிகழ்வாக மேம்படுத்தியுள்ளது என்று கொரியா ஹெரால்டு தகவல் வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Matt Cardy/Getty Images

நியூஸிலாந்தின் மேற்கு கடலோரத்தில் இப்போது 10 நாட்கள் பண்டிகை நடைபெற்று வருகிறது. இதில் பெரிய மண் கிடங்கு, மண் வீடுகளில் ஒரு மாரத்தான், அணிவகுப்புகள் மற்றும் பாப் இசை கச்சேரிகள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு 4 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 40 லட்சம் மக்கள் வந்திருந்தனர். இந்த பிராந்தியத்திற்கு 73 பில்லியன் நியூஸிலாந்து டாலர் வருவாய் கிடைத்தது என்று கேபிஎஸ் வானொலி தெரிவிக்கிறது.

ரோடோரௌ மக்களை ஈர்த்துள்ள இந்த புள்ளிவிபரங்கள், சுற்றுலா பயணிகள் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

எங்களுடைய சிறந்த மாவட்டத்திற்கு அதிக மக்களை ஈர்ப்பதற்கு ஒரு நகைச்சுவை நிகழ்வுதான் இது என்று ரோடோரௌவின் டிராவர் மேக்ஸ்வெல் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்