நவாஸ் ராஜினாமா: பாகிஸ்தான் அரசியலில் அடுத்து என்ன?

நவாஸ் ராஜினாமா: பாகிஸ்தான் அரசியலில் அடுத்து என்ன?

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் நீடிக்க க்கூடாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் பதவிவிலகினார்.

ஊழல் தொடர்பான விசாரணையில் தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தவரின் வருமானம் குறித்து அவர் நேர்மையான விளக்கம் அளிக்கவில்லை என ஐந்து நீதிபதிகள் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளனர்.

ஷரீஃப் மீதான குற்றச்சாட்டுகள் லண்டன் நகர மையத்திலுள்ள நான்கு அடுக்குமாடி குடியுருப்புகள் தொடர்பானது.

பனாமா ஆவணக்கசிவில் வெளியான தரவுகள் அவரது பல பிள்ளைகளை அதில் தொடர்புபடுத்தின.

இந்த குடியிருப்புகளை வாங்க எங்கிருந்து பணம் வந்தது என்பதை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஆராய்ந்தது.

பாகிஸ்தான் பிரதமரின் எதிர்தரப்புக்கு இன்றைய நீதிமன்றத்தீர்ப்பு மிகப்பெரிய வெற்றி.

அரசியல்வாதிகளின் ஊழலுக்கு பேர்போன நாட்டில் அவர்களை பொறுப்பேற்கச்செய்யும் முயற்சிக்கு இது எதிரபாராத வெற்றியும் கூட.

பாகிஸ்தான் பிரதமர்கள் யாருமே தம் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ததே இல்லை.

1990களில் நவாஸ் ஷெரீஃப் இருமுறை பிரதமராக இருந்தார். ஆனால் இராணுவ சதிப்புரட்சி மூலம் அகற்றப்பட்டார்.

நவாஷ் ஷெரீபை பதவியிலிருந்து நீக்குவதற்கான பாகிஸ்தானின் சக்திமிக்க இராணுவ தரப்பின் முயற்சியின் ஒரு பகுதியே இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் என அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அவரது குடும்பத்தவர் தாம் எந்த தவறும் செய்யவில்லை என வலியுறுத்தி வருகிறார்கள்.

அவரது அமைச்சர்களோ நீதிமன்றத்திற்கு வெளியில் நவாஸுக்கான தம் ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தினர்.

அடுத்து ஆளும்கட்சி புதிய தலைவரை நியமிக்கவேண்டும்.

ஆனால் அடுத்த ஆண்டின் மத்தியில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அரசியலில் இப்போதைக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :