வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையால் பரபரப்பு

  • 29 ஜூலை 2017

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய புதியதொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனும் தெரிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை KCNA

இந்த ஏவுகணை 3 ஆயிரம் கிலோமீட்டர் (1,865 மைல்) உயரம் சென்றதாகவும், ஜப்பான் கடலில் விழுந்ததாகவும், ஐப்பானிய தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே அறிவித்திருக்கிறது.

முதலாவது ஐசிபிஎம் சோதனை நடத்திய மூன்று வாரங்களுக்கு பிறகு வட கொரியா இந்த புதிய சோதனையை நடத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவும், தென் கொரிய ராணுவமும் தரையிலிருந்து தரையின் இலக்குகளை தாக்குகின்ற நேரடி ஏவுகணை தாக்குதல் பயிற்சியை நடத்தியுள்ளன என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவத்திருக்கிறார்.

கிழக்கு கடலோரமாக தென் கொரிய கடல் எல்லையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ஜூலை மாதம் ஏவப்பட்டதைவிட உயரமாகவும், தொலைவாகவும் வட கொரியா ஏவியுள்ள இந்த புதிய ஏவுகணை சென்றுள்ளது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு சர்வதேச நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.

2017 ஆம் ஆண்டு வட கொரியா நடத்தியுள்ள 14-ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். இந்த சோதனை ஐநா விதித்துள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டுள்ளது.

"வட கொரிய ஆட்சியின் சமீபத்திய பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடவடிக்கை இது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா?

"அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"

சமீபத்திய இந்த ஏவுகணை அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியையும் அதனையும் தாண்டி சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் வரை சென்று தாக்கக்கூடியது என்று கலிஃபோர்னியாவிலுள்ள மிடில்பெர்ரி சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் அணு ஆயுத தடுப்பு நிபுணர் ஜெஃப்ரி லிவிஸ் தெரிவித்திருக்கிறார்.

டென்வர் மற்றும் சிக்காகோ வரை கூட வட கொரியா தற்போது தாக்கக்கூடிய இலக்கில் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

வடகொரிய ஏவுகணை தாக்குதலைதடுக்கும் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புமுறை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரிய ஏவுகணைகளை அழிக்கவல்ல அமெரிக்க ஏவுகணை அமைப்புமுறை

சமீபத்திய இந்த ஏவுகணை சோதனை வட கொரியாவின் வட பகுதியிலுள்ள ஜகாங் மகாணத்தின் ஆயுத தொழிற்சாலையில் இருந்து 23.41 (15.41 ஜிஎம்டி) மணிக்கு நடத்தப்பட்டுள்ளதாக பென்டகன் கூறுகிறது.

இந்த ஏவுகணை சோதனையை வட கொரியா இரவில் நடத்தியிருப்பது வழக்கத்திற்கு மாறானது. இதனுடைய முக்கியத்துவம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஜகாங் மாகாணத்தில் இருந்து இதுவரை எந்தவொரு ஏவுகணையும் சோதனை செய்யப்படவில்லை. இதற்கு முன்னால் அறிந்திராமல் இருந்து வந்துள்ள ஏவுகணை சோதனை தளம் தற்போது தெரியவந்துள்ளது.

ஜூலை மாதம் சோதனை செய்யப்பட்டதைவிட 6 நிமிடங்கள் அதிகமாக சுமார் 45 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்து சென்றது என்று ஜப்பானிய அமைச்சரவை தலைமை செயலாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்திருக்கிறார்.

வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரியா படைகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :