சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு (22 ஜுலை - 28 ஜுலை 2017)

  • 29 ஜூலை 2017

கடந்த வாரத்தில் உலக நாடுகளில் எடுக்கப்பட்ட நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களை உங்களுக்கு வழங்குகின்றோம்.

படத்தின் காப்புரிமை VALERY HACHE/AFP
Image caption மத்தியதரைக் கடலோரமாக இருக்கும் உள்ளூர் மலைபாங்கான பகுதி மற்றும் கோர்சிகா தீவின் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயால் சேதமடைந்துள்ளது. குறைந்தது 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
படத்தின் காப்புரிமை FEDERICO PARRA/AFP
Image caption ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சர்ச்சைக்குரிய புதிய அரசியல் சாசனப் பேரவை தேர்தலை சீர்குலைக்கும் அல்லது பாதிக்கின்ற போராட்டங்களை வெனிசுலோ தடை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டங்கள் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
படத்தின் காப்புரிமை Adam Pretty/Getty Images
Image caption ஹங்கேரியில் நடைபெற்ற ஃபினா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆடவர் நீர் போலோ விளையாட்டு போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய ஆடவர் அணியினர்.
படத்தின் காப்புரிமை MAL FAIRCLOUGH/afp
Image caption வத்திக்கானின் பொருளாளர் 76 வயதான கர்தினால் ஜார்ஜ் பெல் காவல்துறையினர் மற்றும் மக்களால் சூழப்பட்ட நிலையில் மெல்ஃபோர்ன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் குற்றமற்றவர் என்று வாதிடப்போவதாக கர்தினாலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
படத்தின் காப்புரிமை Xinhua/REX/Shutterstock
Image caption சீனாவின் ஜீவின் மாகாணத்தில் பெய்துள்ள கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, யோங்யி வட்டாரத்தில் பள்ளி விளையாட்டு தளத்தில் சேற்றை சுத்தப்படுத்தும் ஆசிரியர்கள்.
படத்தின் காப்புரிமை GEORGES GOBET/afp
Image caption பிரான்சிஸில் செயின்ட் பார்டனிலுள்ள டோர்டோக்னே ஆற்றில் நீர் சறுக்கி விளையாடும் மக்கள். பெருங்கடல் அலையோடு ஆற்று நீரோட்டத்தில் இணைந்து ஓராண்டில் பல முறை பேரலை உருவாகின்றது.
படத்தின் காப்புரிமை Rick Rycroft/REUTERS
Image caption சிட்னியில் நடைபெற்ற இருதரப்புக் கூட்டத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப்போடு செல்பி எடுத்துக் கொள்ளும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன்
படத்தின் காப்புரிமை Danny Lawson/PA
Image caption சிறுவடிவ மாதிகளின் கலைஞர் ஜேன் பிட்டிக், யார்க்ஷீரிலுள்ள நியுபை அரங்கத்தில் உருவாக்கிய பொம்மைகளின் இல்லத்தை பார்வையிடும் 7 வயது ஃபெரியா கிப்சன்
படத்தின் காப்புரிமை Navesh Chitrakar/REUTERS
Image caption நேபாளில் காட்மண்ட் பசுபதிநாத் கோயிலில் நடைபெற்ற புனித நூல் பண்டிகையின்போது, வண்ண பொடி மற்றும் அரிசியை கலந்து நெற்றியில் வைத்திருக்கும் ஓர் இந்து மத குரு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :