18 லட்சம் ரூபாய்க்கு விலைப்போனது டிரம்ப் வரைந்த ஓவியம்

  • 30 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் 29,184 டாலருக்கு விற்பனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் 29,184 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

மான்ஹாட்டனில் உள்ள வானுயர கட்டடங்களை குறிக்கும் டிரம்பின் படைப்பில் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் கட்டடத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றிற்காக இந்த ஓவியம் உண்மையில் வரையப்பட்டது. ஆனால், இதன் வெற்றியாளர் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸை மையமாக கொண்டு இயங்கும் நேட் டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனத்திடம் டிரம்பின் படைப்பை கைமாற்றியுள்ளார்.

ஏலத்தின்போது டிரம்பின் ஓவியத்திற்கு வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக ஆர்வம் இருந்ததாக ஏலத்தை விடுக்கும் மைக்கல் கிர்க் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை HANDOUT
Image caption 29,184 டாலருக்கு விலைப்போன டிரம்பின் கலைபடைப்பு

''இந்த கலை படைப்பு வெறும் டிரம்பின் பின் தொடர்பாளர்களை மட்டும் ஈர்க்கவில்லை, அதிபர்களின் நினைவு பொருட்களை சேகரிக்கும் சேகரிப்பாளர்களையும் ஈர்த்துள்ளது,'' என்றார் அவர்.

9,000 டாலர்களில் தொடங்கிய ஏலத்தில், 11 விலைகள் முன்வைக்கப்பட்டன. இறுதியாக, 29,184 டாலர்களுக்கு விற்கப்பட்டது.

டொனால்ட் டிரம்பிக்கு தொடர்புடைய பொருள் ஒன்று ஏலத்தில் விற்கப்படுவதற்கு முதன்முறையல்ல. இதற்குமுன்பு, டிரம்ப் பயன்படுத்திய ஃபெரராரி கார் ஒன்றும், கோல்ஃப் கிளப்பின் ஒரு தொகுப்பும், டிரம்ப் கையெழுத்திட்ட விஸ்கி பாட்டில் ஒன்றும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :