உலகிலேயே "நீளமான" தொங்கும் பாலம் ஸ்விட்சர்லாந்தில் திறப்பு

  • 30 ஜூலை 2017
ஸெமார்திலுள்ள தொங்கும் நடைபாலம் படத்தின் காப்புரிமை EPA
Image caption இதற்கு முன்னதாக இங்கு இருந்த பாலம் பாறைகள் விழுந்து சேதமாகிவிட்டது

ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் 500 மீட்டர் (1,640 அடி) நீளத்தில், உலகிலேயே நீளமான தொங்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது.

காற்று வாங்க அல்லது உடற்பயிற்சிக்காக இயற்கையான சூழலில் சென்றுவர உகந்த அளவில் இந்த தொங்கும் நடைபாதை பாலம் உள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

"ஐரோப்பிய பாலம்" என்று பெயரிடப்பட்டுள்ள 494 மீட்டர் நீளமான இந்த பாலம் கிராபென்குஃபர் செங்குத்து குறுகிய பள்ளதாக்கிற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.

நிலத்திற்கு மேலே 110 மீட்டர் உயரத்தில் 405 மீட்டர் பாலம் ஒன்று ஆஸ்திரியாவின் ரௌட்டேயில் இருக்கின்றபோதிலும், இந்த ஸெர்மாத் நகரிலுள்ள தொங்கும் நடைபாதைதான் உலகிலேயே மிக நீளமானது என்று ஸெர்மாத் சுற்றுலா வாரியம் தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA

இதற்கு முன்னால் இங்கு அமைக்கப்பட்டிருந்த பாலம், பாறைகள் விழுந்து சேதமடைந்துள்ள நிலையில் அதற்கு பதிலாக இந்த தொங்கும் நடைபாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 8 டன் வடங்கள் (கேபிள்) இந்த பாலம் ஆடுவதிலிருந்து தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

ஸ்விட்சர்லாந்தின் தென் பகுதியில் ஸெர்மாத் மற்றும் கிராச்சென்னுக்கு இடையில், மாட்டர்ஹான் மலைக்காட்சிகளை ரசித்தவாறு இரண்டு நாட்கள் மலையேறும் பாதையின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்