பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சி - “வேலையின்மையும், அதிக செலவும் காரணமாம்”

  • 31 ஜூலை 2017

மக்கள்தொகையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகளுக்கு பின்னரும் இந்த ஆண்டு தென் கொரிய மக்கள்தொகை வளர்ச்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தம்பதியர் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ளுவதற்கு ஊக்கமளிப்பதற்காக பில்லியன் கணக்கான டாலர்களை தென் கொரியா செலவிட்டுள்ளது

இந்த ஆண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள்தான் பிறக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முதியோர் அதிகரிப்பது பொருளாதரத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கவலைகளை அதிகரித்து வருகின்றன.

இளைஞர்கள் பலர் வேலையின்றி இருப்பதுதான் குழந்தைகளின் பிறப்பு விகித வீழ்ச்சிக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், வீடு மற்றும் உயரும் கல்வி செலவுகள் உள்பட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பால் பெரியதொரு குடும்பத்தை கொண்டிருப்பதை ஒரு தெரிவாக தாங்கள் கொள்ளவில்லை என்று தம்பதியர் கூறுகின்றனர்.

பலவீனமான மகப்பேறு விடுமுறை கொள்கை மற்றும் வீட்டு வேலைகளில் உதவுவதற்கு ஆண்களின் பிடிவாதமான எதிர்ப்பு பற்றிய கவலைகள், பெண்களுக்கு மேலதிகமாக பிரச்சனைகளாக இருக்கின்றன என்று பிபிசி உலகச் சேவையின் ஆசிய-பசிபிக் பதிப்பாசிரியர் செலினா ஹாட்டன் தெரிவித்துள்ளார்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2016 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, தென் கொரியாவின் இறப்பு விகிதம் 1000 பேருக்கு 5.8 பேர்

தென் கொரியாவில் ஓராண்டுக்கு 4 லட்சத்திற்கும் குறைவாக, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது இதுவே முதல்முறை.

குழந்தை பிறப்புக்கு ஊக்கத்தொகை, மகப்பேறு விடுமுறையில் மேம்பாடு மற்றும் கருவள சிகிச்சை செலவுக்கு உதவி ஆகிய முயற்சிகள் மூலம் கடந்த தசாப்தங்களில் தென் கொரியாவின் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாடு 70 பில்லியன் டாலர்களை (53 பில்லியன் யூரோ) செல்வு செய்துள்ளது.

இவ்வாறான பிறப்பு விகித குறைவால் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் குறைவு ஏற்படலாம் என்றும், சாத்தியமாகும் பொருளாதார வளாச்சி அதிக முதியோருக்காக செலவு செய்யப்படும் நலவாழ்வு செலவு அதிகரிப்பதால் குறையும் என்றும் அதிகாரிகளுக்கிடையே அச்சம் எழுந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, தென் கொரியாவின் இறப்பு விகிதம் 1000 பேருக்கு 5.8 பேர் அல்லது சுமார் 2 லட்சத்து 95 ஆயிரம் என்று தெரிய வருகிறது.

உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :