நைஜீரியா: டஜன் கணக்கான ஒருபால் உறவுக்காரார்கள் கைது

  • 1 ஆகஸ்ட் 2017
இரு ஆண்கள் கைகளை கோர்த்திருக்கும் புகைப்படம்.
Image caption ஓரினச்சேர்க்கை எண்ணத்தை வெளிப்படுத்துவது நைஜீரியாவில் சட்டப்படி குற்றம்.

வார இறுதி நாட்களில் ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 40-க்கும் மேற்பட்ட ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நைஜீரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் பின்னர் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

லாகோஸ் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றை, கடந்த சனிக்கிழமை நண்பகல் சோதனை செய்த போது, பலர் கும்பலாக அங்கு இருந்தனர் என காவல் துறையினர் தெரிவித்ததாக நைஜீரிய செய்தித்தாளான `பன்ச் ரிப்போர்ட்ஸ்` செய்தி வெளியிட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் மற்றும் ஓரினச்சேர்க்கை எண்ணத்தை வெளிப்படுத்துவது ஆகியவை நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட குற்றமாகும். இந்த செயல்களில் ஈடுபடுவர்களுக்கு அந்நாட்டு சட்டத்தின்படி 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் தென் பகுதியில் கிறிஸ்துவ எவான்ஜிலிகல் இயக்கத்தின் தாக்கமும், வட பகுதியில் இஸ்லாமிய சட்டத்திற்கு ஆதரவும் காணப்படுகிறது. இந்த இரண்டுமே ஓரினச்சேர்க்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கிறிஸ் எவோகோர் தெரிவிக்கிறார்.

சர்வதேச லெஸ்பியன்,ஓரினச்சேர்க்கை,இருபாலின சேர்க்கை, திருநங்கை மற்றும் இடையிலிங்க சங்கத்தின் அறிக்கையின்படி, ஓரினச்சேர்க்கை திருமணங்கள் 72 நாடுகளில் வெளிப்

ஒரு பாலின திருமணத்தை சட்டவிரோதமாக அறிவித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துவரும் நிலையில், பெலிஸ் மற்றும் செஷல்ஸ் தீவு ஆகிய நாடுகள் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு எதிரான சட்டத்தை கடந்த ஆண்டு திரும்பப் பெற்றுள்ளன.

உலகின் போக்கிற்கு எதிராக இருக்கக் கூடிய ஒரு சில நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று.

கடந்த 1901-ஆம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு நைஜீரியாவில் தடை இருந்து வருகிறது. மேலும் ஓரினச் சேர்க்கை திருமணங்கள், ஓரினச்சேர்க்கை குழுக்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை ஆர்வத்தை பொதுவெளிகளில் வெளிப்படுத்துவது ஆகியவற்றுக்கு 2013-ஆம் ஆண்டு முதல் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்