ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற தடை: டிரம்புக்கு ஓய்வுபெற்ற ராணுவத்தினர் எதிர்ப்பு

  • 2 ஆகஸ்ட் 2017
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கிட்டதட்ட 7000 திருநங்கைகள் தற்போது அமெரிக்க ராணுவப் பணியில் இருக்கின்றனர்

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றத் தடை விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்து, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 56 தளபதிகள், அட்மிரல்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள், அதிபர் டிரம்பிற்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.

இத்தடை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் என கூறியுள்ள ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், இதனால் திறமையானவர்களை ராணுவம் இழப்பதுடன், ராணுவத்தினர் பொய்யான வாழ்வினை வாழ கட்டாயப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தில் "எந்த விதத்திலும்" திருநங்கைகள் பணியாற்ற முடியாது எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

கிட்டதட்ட 7000 திருநங்கைகள் தற்போது அமெரிக்க ராணுவ பணியில் இருக்கின்றனர். புதிய தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என அதிபர் டிரம்ப் தெளிவான வழிகாட்டும் வரை, ஆயுத படைகள் தொடர்ந்து திருநங்கைகளை பணியாற்ற அனுமதிக்கலாம் என மூத்த ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்