பாகிஸ்தான்: பெண்களுக்காக ஆங்கில பத்திரிக்கை தொடங்கிய தாலிபான்

தாலிபான் படத்தின் காப்புரிமை Getty Images

பெண்கள் மற்றும் ஆண்கள் வழிதவறாமல் இருக்க, அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவிடவேண்டும் என்று தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானின் முக்கியத் தலைவர் ஃபஜ்லுல்லாஹ்வின் மனைவி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜிகாதின் வழியில் பெண்களை ஈர்ப்பதற்காக தாலிபான் வெளியிடும் பத்திரிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தாலிபான் பெண்களுக்காக ஒரு ஆங்கில பத்திரிகையை வெளியிட்டுள்ளது, அதன் முதல் பதிப்பு அண்மையில் வெளியானது.

அதில், 'ஜிகாதியாக' விரும்பும் ஆறு வயது சிறுமியின் கதையும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

'சுன்னத்-இ-குலா' என்ற அந்த பத்திரிகை, பெண்கள் 'ஜிகாத்'இல் இணையவேண்டும் என்று வெளிப்படையாக அழைப்புவிடுத்துள்ளது.

ஒரு பெண் பத்திரிகையாளரும் தனது கதையை இந்த இதழில் சொல்லியிருக்கிறார். இஸ்லாமை ஏற்றுக் கொண்டபிறகு மேற்கத்திய நாடுகளுக்கு சென்று கல்வி பயின்றது, வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது என அவர் தன் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை SUNNATEKHULA

பெண்கள் கையெறி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும் கையாளக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஃபஜ்லுல்லாஹ்வின் மனைவி கூறியிருக்கிறார். பெண்கள் ஜிகாதி பயிற்சியையும் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தஹ்ரீக் தாலிபான் பாகிஸ்தான் வெளியிடும் இந்த பத்திரிக்கையில் உச்சி முதல் பாதம் வரை துணியால் உடலை மூடியிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் அட்டைப்படமாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிக்கையின் தலையங்கத்தில், பெண்கள் ஜிகாதில் தங்களது பங்களிப்பை வழங்கவேண்டும் என்று ஆலோசனை சொல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜிகாதில் இணைய விரும்பும் பெண்களுக்கான ஆலோசனைகளையும் இந்த பத்திரிக்கை கூறுகிறது.

மற்றொரு கட்டுரையில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.

அதிகளவு மக்கள் ஜிகாதில் இணைய ஊக்குவிப்பதற்காக, தாலிபான் பாகிஸ்தான், உருது மற்றும் ஆங்கிலத்தில் ஜிகாதி தொடர்ந்து பத்திரிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்