இந்த வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு ( 30 ஜூலை - 5 ஆகஸ்ட்)

  • 5 ஆகஸ்ட் 2017

இந்த வாரம் உலக நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.

Prince Philip raises his hat படத்தின் காப்புரிமை Hannah McKay/ Reuters
Image caption பொது கடமைகளிலிருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெறுவதற்குமுன், அவர் தனியாக கலந்து கொண்ட இறுதி கூட்டத்தில் அரச கடற்படையினர்களை இளவரசர் சந்தித்தார். 96 வயதாகும் எடின்பர்க் கோமகன் அரசியாருடன் சேர்ந்து சில நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
A protester spreads his arms out as he runs in front of a fire. படத்தின் காப்புரிமை Leonardo Benassatto/ Reuters
Image caption பிரேசிலின் வீடற்ற பணியாளர்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், அந்நாட்டு அதிபர் மிஷெல் டெம்மருக்கு எதிராக சவும் பெளவ்லோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் எதிர்வினை ஆற்றினார். அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், பொருளாதார சீர்திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Theresa May and The Duke and Duchess of Cambridge watch poppies fall படத்தின் காப்புரிமை Andrew Matthews/ PA Wire
Image caption கேம்பிரிட்ஜ் கோமகன், அவரது மனைவி மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே ஆகியோர் பாஷென்டேல் போரின் 100வது ஆண்டு நினைவுகூறல் நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வின்போது, பெல்ஜியத்தின் ஈப்ராவில் உள்ள மெனின் கேட்டின் மாடியிலிருந்து வண்ணக் காகிதங்கள் கீழே விழுந்தன.
A priest sprays water as troops walk by படத்தின் காப்புரிமை Eduard Korniyenko
Image caption ரஷ்யாவில் உள்ள ஸ்டாவ்ரோபூல் நகரில் உள்ள ராணுவ தளத்தில் ரஷ்ய படையினருக்கு பழமைவாத மதகுரு ஒருவர் ஆசீர்வாதம் வழங்குகிறார்.
A graffiti artist work on a huge mural of John Lennon as he takes part in Upfest, a street art and graffiti festival in Bristol. படத்தின் காப்புரிமை Ben Birchall/ PA
Image caption பிரிஸ்டலில் ஒரு வீதி ஓவிய திருவிழாவின்போது, அதன் அங்கமாக ஜான் லெனனின் மிகப்பெரிய சுவர் ஓவியம் ஒன்றை இந்த கிராஃபிட்டி கலைஞர் வரைகிறார். பொதுவெளி சுவர்களில் ஓவியம் வரைவதே கிராஃபிட்டி ஓவியமாகும்.
A woman paints sculptures of goddesses படத்தின் காப்புரிமை ARINDAM DEY/ AFP
Image caption திரிபுராவில் உள்ள அகர்தலாவில், இந்திய கலைஞர் ஒருவர் இந்து மதக்கடவுள் துர்கையின் களிமண் சிலையை தயாரித்து வருகிறார்
Horse and riders take part in the Riding of the Marches ford on the River Esk, alongside the Roman Bridge in Musselburgh, East Lothian, during the annual Musselburgh Festival படத்தின் காப்புரிமை Jane Barlow/ PA
Image caption ஸ்காட்லாந்தில் உள்ள கிழக்கு லோத்தியனில், முஸெல்பர்க் திருவிழாவில் பங்கேற்ற குதிரைகள் மற்றும் குதிரை வீரர்கள்.
Dancers in costumes perform at a festival படத்தின் காப்புரிமை LEGNAN KOULA / EPA
Image caption ஐவரி கோஸ்டின் அபிட்ஜானில் 8வது ஃபிராங்கோபோனி விளையாட்டின் நிறைவு விழாவில் நடனமாடும் நடன கலைஞர்கள்.

அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :