பிபிசி தமிழில்... இதுவரை இன்று...

படத்தின் காப்புரிமை Getty Images

பிபிசி தமிழ் பக்கத்தில் இன்று இதுவரை வெளிவாகியுள்ள செய்திகளின் தொகுப்பு.

ஐம்பது தீவுகள் மற்றும் செங்கடலில் உள்ள பிற பகுதிகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றும் மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தினை செளதி அரேபியா தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

செங்கடலில் ஆடம்பர கடற்கரை விடுதிகள் கட்டும் செளதி அரேபியா

இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நீடிப்பதற்கு மத்தியில், அமைதியை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன், சீனாவுடன் அண்மையில் மோதி வெற்றி பெற்ற சாம்பியன்ஷிப் பட்டத்தைத் திருப்பி அளிக்க விரும்புவதாக இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க.. கீழே கிளிக் செய்யவும்...

'இந்தியா-சீனா' அமைதிக்காக தனது பட்டத்தை திருப்பியளிக்க விஜேந்தர் சிங் முடிவு

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் நான்காம் பாகம்.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்

'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?

தன்னுடைய மனைவியின் உடல் அழகை வர்ணித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அமெரிக்கக் கணவர் ஒருவர், உடல் வடிவம் மற்றும் பெண்ணியம் குறித்த எதிர்வினைகளை இணையதளத்தில் சந்தித்து வருகிறார்.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

காதல் மனைவியின் அழகை வர்ணித்ததால் கணவருக்கு வந்த சோதனை

ஒரு இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்து குற்றத்திற்காக, ஹரியாணா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் மகன் உள்பட இருவரை சண்டிகர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பிபிசியிடம் என்ன நடந்தது என்று விளக்கிய செய்தி.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

`இரவில் தனியாக செல்லும் பெண் எண்பதை அறிந்தே என்னை நிறுத்த முயன்றனர்'

கூகுள் நிறுவனத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை விமர்சித்து, அந்நிறுவனத்தின் ஆண் ஊழியர் ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சலசலப்பை உண்டாகியுள்ளது.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

ஆண், பெண் வேறுபாடு: கூகுள் ஊழியரின் கருத்தால்சர்ச்சை

ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக திறக்கப்பட்ட அறைகளின் தற்போதைய நிலைமை என்ன? பொதுவெளியில் பாலூட்டும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன போன்றவற்றை பற்றி அலசும் காணொளி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலக தாய்ப்பால் வாரம்: தாய்மையை போற்றுவோம் (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்