தனது மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலத்துக்கு பாராட்டு

  • 8 ஆகஸ்ட் 2017
Stacey Solomon படத்தின் காப்புரிமை @staceysolomon

தனது மார்பகங்களை தானே பாராட்டிக் கொள்ளும் காணொளி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக, `லூஸ் வுமன்` என்ற வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஸ்டேசி சாலமோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த காணொளியில் வெள்ளை நிற பிகினி உடையுடன் தோன்றும் ஸ்டேசி, தனது உடல் குறித்து விளக்கிப் பேசுகிறார்.

`சமூகத்தின் பார்வையில் குறைபாடாகப் பார்க்கப்படும் பாகங்களை, என் உடலில் உள்ள பாகங்களை கொண்டாடுவதாக` அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளிக்கு இதுவரை 2000 பேர் கமெண்ட் செய்துள்ளனர். அனைத்து பெண்களுக்குமான சிறந்த கருத்து இந்த காணொளியில் கூறப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளவாசிகள் பலரும் அவரை புகழ்கின்றனர்.

`என்னுடைய பிகினி உடலில் நான் காதலிக்கும் மூன்று விடயங்கள்` என்ற வசனத்தை கூறி அந்த காணொளியை ஸ்டேசி தொடங்குகிறார்.

இதனைத் தொடர்ந்து, `கம்பளிப் பூச்சி போன்ற தனது முன்புறம்` மற்றும் ` கீழே படுக்கும் முன்னரே தரையை அழுத்தும் மார்பகங்கள்` என்றும் காணொளியில் பேசுகிறார்.

`குழந்தைகளின் பொழுதுபோக்கு`

`என்னுடைய தளர்வுற்ற மார்பகங்கள் சிறந்தவையாக இல்லாவிட்டாலும், நான் அவற்றை விரும்புகிறேன்.மேலும் சுற்றுலாவுக்கு செல்லும் போது பைகள் ஏதும் எனக்கு தேவைப்படாது` என அவர் அந்த காணொளியில் கூறுகிறார்.

தனது மார்பகங்களுக்கு அடியில் இருந்து ஒரு கண் கண்ணாடியையும், ஒரு பனிக்கட்டியையும் ஸ்டேசி எடுப்பது போன்ற காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.

பின்னர் தனது உடலிலுள்ள வரித் தழும்புகளை குறிப்பிடும் ஸ்டேசி, அவற்றை விரும்புவதாகவும், தனது குழந்தைகள் விளையாட அவை நேரமளிப்பதாகவும் கூறுகிறார்.

அவர் உடலில் அவரது குழந்தைகள் வரைந்து விளையாடுவதை காட்டும் ஸ்டேசி,`அவர்களை பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்` என கூறுகிறார்.

`விடுமுறை நாட்களில் எப்படி காட்சியளிப்போம் என்பது குறித்தே அனைவரும் கவலைப்படுகிறார்கள்`

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐ தொலைக்காட்சியின் எக்ஸ் ஃபேக்டர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஸ்டேசி சாலமோன் பிரபலமடைந்தார்.

`நீங்கள் அனைவருமே குறைபாடற்ற குறைபாடு உடையவர்கள், தனித்துவம் மற்றும் அழகானவர்கள். என் மீது சமூகம் பார்க்கும் குறைபாடுகளை கொண்டாடும் சிறிய விடுமுறை நாள் காணொளியை உருவாக்க நினைத்தேன். ஆனால் உண்மையில் அவற்றை நான் விரும்புகிறேன். அவை என்னுடைய உடலின் பகுதிகள். அவற்றுக்கென தனித்துவமான பயன்பாடுகளும் உள்ளன.

பிற செய்திகள்:

அனைவரும் தங்களுடைய பாதுகாப்பற்ற தன்மையை காட்டத் தொடங்கினால், நம்மை எப்போதும் அழுத்திக் கொண்டிருக்கும், குறைபாடு இல்லாதவற்றை காணும் உலகத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை உணரத் தொடங்குவோம்.`என ஸ்டேசி கூறுகிறார்.

பதிவிடப்பட்ட 5 மணி நேரத்தில் இந்த வீடியோ 1,66,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. `இது ஒரு சிறந்த முன்னுதாரணம்` என பாராட்டியுள்ள சமூக வலைத்தளவாசிகள், இது குறித்த தங்களுடைய அனுபவங்களையும் அந்த காணொளி பதிவின் கீழ் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

@eliza.doyle கூறுகிறார் :` இந்த காணொளிக்காக மிகவும் நன்றி.சிறிது உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருப்பதை உணர்கிறேன். ஒரு தாயாக மாறும் போது, உங்கள் உடல் முழுவதும் மாற்றமடையும்.

@tasha00000000 கூறுகிறார்: பிரசவத்திற்கு பின்னதான எனது உடல் அமைப்பிலிருந்து என்னை சற்று ஆறுதல்படுத்தியிருக்கிறீர்கள். என் உடலில் இருக்கும் வீக்கத்தை ஒழிக்கும் வழியை தேட வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :