பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கியச் செய்திகள்

  • 7 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழ் பக்கத்தில் இன்று (திங்கள்கிழமை)வெளியாகியுள்ள முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவால் கருத்தரித்த 10 வயது சிறுமி கருக்கலைப்புக்கு மறுத்திருப்பது இந்தியா ஊடகங்களின் பெருங்கவனத்தை பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

கருவுற்றதை அறியாத 10 வயது சிறுமி: கருக்கலைப்பு செய்து கொள்ள மறுப்பு

தென் கொரியாவின் பேச்சுவார்த்தை அழைப்பினை நிராகரித்துள்ள வட கொரியா, தங்கள் நாடு மீது புதிய தடைகள் விதிக்க காரணமான அமெரிக்காவுக்கு பதிலடி தருவோம் எனவும் சபதம் செய்துள்ளது.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம்: வட கொரியா எச்சரிக்கை

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் நான்காம் பாகம் இது.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?

பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக மத்திய அமைச்சரவையில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

பாகிஸ்தான் அரசில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பெற்ற இந்து அமைச்சர்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விஜேந்தர் சிங்

இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நீடிப்பதற்கு மத்தியில், அமைதியை ஏற்படுத்தும் நல்லெண்ணத்துடன், சீனாவுடன் அண்மையில் மோதி வெற்றி பெற்ற சாம்பியன்ஷிப் பட்டத்தைத் திருப்பி அளிக்க விரும்புவதாக இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க.. கீழே கிளிக் செய்யவும்...

'இந்தியா-சீனா' அமைதிக்காக தனது பட்டத்தை திருப்பியளிக்க விஜேந்தர் சிங் முடிவு

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தினை செளதி அரேபியா தொடங்கியுள்ளது. மது, திரைப்படம் மற்றும் திரையரங்குகள் ஆகியவை செளதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க... கீழே கிளிக் செய்யவும்...

செங்கடலில் ஆடம்பர கடற்கரை விடுதிகள் கட்டும் செளதி அரேபியா

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக திறக்கப்பட்ட அறைகளின் தற்போதைய நிலைமை என்ன? பொதுவெளியில் பாலூட்டும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன போன்றவற்றை பற்றி அலசும் காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலக தாய்ப்பால் வாரம்: தாய்மையை போற்றுவோம் (காணொளி)

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்