பெண்களுக்கான 'டவல்' பிராவுக்கு பெருகும் ஆதரவு

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பு படத்தின் காப்புரிமை TaTaTowel

`டா-டா-டவல்` என பெயரிடப்பட்டுள்ள துண்டால் செய்யப்பட்ட உள்ளாடைக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக, இந்த புதிய வகை உள்ளாடை குறித்து பெண்களின் சமூக வலைத்தள பக்கங்களில், பல நிறுவனங்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

முதல் முறை இந்த உள்ளாடையை பார்க்கும் போது, வினோதமாக தெரியும். `உறிஞ்சக்கூடிய தன்மையுள்ள துணியினால் உருவாக்கப்பட்ட, மார்பகங்களை மட்டும் மறைக்கக் கூடிய பெண்களுக்கான உடை` மற்றும் `உங்களுக்கு தேவை என்பதை நீங்கள் அறிந்திராத மார்பகங்களுக்கான உடை` என இந்த உள்ளாடைக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Tatatowel.com
Image caption சிலர் இந்த உள்ளாடையை மிகச்சிறப்பானது எனவும், சிலர் அசிங்கமானது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பார்ப்பதற்கு பிகினி உடையின் மேலாடை போல காட்சியளிக்கும் இந்த உள்ளாடை முழுக்க துணியால் உருவாக்கப்பட்டது.

இது குறித்து எழுதிக் கொண்டிருக்கும் போதே, சமூக வலைத்தளங்கள் இந்த உள்ளாடை குறித்த பதிவுகளால் வேகமாக சூழப்படுகின்றன. மற்றொரு பக்கம், இதனை பிடிக்காதவர்கள், ` `இது தேவையற்றது`, `அசிங்கமானது` ` மிகவும் முட்டாள்தனமானது` என பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் எதிர்ப்பக்கத்தில் டா-டா அணி என்ற குழு, இது வேடிக்கையானது, இது யாரையும் புண்படுத்தவில்லை என கூறி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Facebook
Image caption டா-டா-டவல் குறித்த கலவையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.

ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

பாரம்பரியமாக, முதலாளித்துவ மேற்குலக சமுதாயம், தங்களது வியாபாரத்திற்காக மார்பகங்களை ஒரு மோகப் பொருள் போன்ற பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளது. இந்த யுக்தி மூலம் பில்லியன்கணக்கான டாலர்கள் பணம் உருவாக்கப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான மக்கள் ஒரு விடயத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றால், தற்போது கிடைக்கும் பொருட்களை விட `டா-டா-டவல்` செக்ஸ் ஆசைகளை அதிகம் தூண்டக்கூடிய பொருள் இல்லை எனலாம்.

கடந்த சில ஆண்டுகளாக உள்ளாடை வடிவமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மார்பகங்களை தாங்கிப் பிடிக்கும் ஒரு ஆடையை உலகம் கண்டுபிடித்துள்ளதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

பெண்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை கையில் எடுத்து, அதற்கு புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வு கண்டுள்ளதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது.

டா-டா-டவலை உருவாக்கிய எரின் ராபர்ட்சன், உடைந்த குளிர்சாதன பெட்டியுடன் லாஸ் ஏஞ்சலஸில் வாழ்ந்து வருகிறார். குளித்து முடித்து வெளியில் வந்த அடுத்த நிமிடத்திலிருந்து அவரது மார்பகங்களுக்கு கீழ் வியர்த்துவிடுமாம்.

` நான் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். துணியை என் மார்பகங்களுக்கு அடியில் வைத்தேன். உடல் முழுவதும் குழந்தைகளுக்கான பவுடரை கொட்டி முயற்சி செய்தேன். டி-சர்ட்டை அணிந்து, அதனை என் மார்பகங்களுக்கு கீழ் வைத்துக் கொண்டேன்'' என்று தெரிவித்தார்.

''ஆனால், சில நிமிடங்களில் மார்பகத்திற்கு அடியில் வைத்த துணியின் இயல்பே மாறிப்போயிருந்தது. குழந்தைகளுக்கான பவுடர், என்னை ஒரு மாவுப் படலத்திற்குள் அழுத்தியது போல ஆக்கிவிட்டது. மேலும், நான் அணிந்த டி-சர்ட் மேலும் அதிகமாக எனக்கு வியர்வையை உருவாக்கியது.` என தனது இணையதளத்தில் எரின் ராபர்ட்சன் எழுதியுள்ளார்.

இது சொல்வதற்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. குறிப்பாக பெரிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்கு, இது கோடை காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

வழக்கமான நிலையை தாண்டி, பெண்கள் இந்த புதிய வகை உள்ளாடைக்காக பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போது இந்த டா-டா-பிரா, சி முதல் ஹெச் வரையிலான உள்ளாடை அளவுகளில் கிடைக்கிறது.

தாய்மார்களுக்கு, டா-டா-பிரா மூலம் மேலும் ஒரு நன்மை கிடைக்கிறது. இந்த புதிய வகை உள்ளாடை, பாலூட்டும் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ப்பாளர்களுக்கான குழுவில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாலூட்டுதல் குறித்த விவாதங்களை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இரவு நேரத்தில் பாலூட்டும் போது தனது மார்பகங்களில் ஏற்படும் கசிவு காரணமாக தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டன, எப்படி தனது டி ஷர்ட்டுக்கு முன் பகுதியில் துணியை வைத்து சமாளித்தேன் என்பது குறித்து, தனது `பேபி சென்டர்` என்ற வலைத்தளத்தில் சாரா மெக்கின்னிஸ் என்ற பாலூட்டும் தாய் எழுதியுள்ளார்.

நிச்சயமாக, எல்லாருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்காது. ஆனால் இது குழந்தையை பிரசவித்த அடுத்த சில மாதங்களில் பெண்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்த நேர்மையான, ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :